மூத்த சினிமா பிஆர்ஓ நெல்லை சுந்தரராஜனுக்கு கலைமாமணி விருது... முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்!
சினிமா பிஆர்ஓ நெல்லை சுந்தரராஜனுக்கு தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
சென்னை: தமிழக அரசின் சார்பில் சினிமா பிஆர்ஓ நெல்லை சுந்தரராஜனுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கடந்த 8 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த காலகட்டத்திற்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

இதையடுத்து கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நேற்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
நடிகர்கள் கார்த்தி, சசிகுமார், இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, நடிகை நளினி உள்ளிட்டோர் முதலமைச்சரிடம் இருந்து விருதுகளை பெற்றுக்கொண்டனர். அதேபோல் தமிழ் சினிமாவின் மூத்த பத்திரிகை தொடர்பாளர் நெல்லை சுந்தரராஜனுக்கும் முதலமைச்சர் பழனிசாமி கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தார்.


Click it and Unblock the Notifications











