கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு 5 பிரிவுகளில் விருது

சென்னை : அட்வர்டைசிங் கிளப் ஆப் மெட்ராசின் 'மேடிஸ்' (MADDYS) விளம்பர விருதுகள் 2021' - இல் 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது கலர்ஸ் தமிழ் .

தமிழகத்தின் முக்கியமான ஒரு பொழுது போக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் 'மேடிஸ் விளம்பர விருதுகள் (MADDYS) 2021'-ல் பல்வேறு பிரிவுகளுள் 5 மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளது.

அட்வர்டைசிங் கிளப் மெட்ராஸ் ஆண்டுதோறும் புதுமைகளை போற்றும் விதமாக பல்வேறு தொலைக்காட்சி மற்றும் ஊடக நிறுவனங்களின் சிறப்பை அங்கீகரித்து, கவுரவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு புத்துணர்ச்சியூட்டும் செயல்பாட்டிற்காக 60 வெவ்வேறு பிரிவுகளுள் 5 முக்கிய பிரிவுகளில் கலர்ஸ் தமிழ் நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

தனித்துவமான

தனித்துவமான

புதுமைகளின் குவியல் என்ற அடிப்படையில் இந்த சேனலுக்கு தங்கம், வெளிப்புற தளத்தை சிறப்பாக பயன்படுத்தியதற்காகவும், தனித்துவமான தொலைக்காட்சி நிகழ்ச்சி விளம்பரம் ஆகியவற்றுக்காக 2 வெள்ளி மற்றும் சிறந்த பிரிண்ட் பயன்பாடு மற்றும் தொலைக்காட்சியின் ஒருமுறை விளம்பரத்திற்கு (ஒன் டைம் சிங்கிள் ப்ரோமோ ) என 2 வெண்கல பதக்கங்களும் கிடைத்துள்ளன.

எப்போதும் துணையாக

எப்போதும் துணையாக

இந்த வெற்றி குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தகத் தலைவர் அனுப் சந்திரசேகரன் கூறுகையில், "மேடிஸ் விளம்பர விருதுகள் 2021-ல் 5 மதிப்புமிக்க விருதுகளை பெறுவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சிறப்பாக பணியாற்றும் எங்கள் குழுவினருக்கு பின்னால் நாங்கள் எப்போதும் துணையாக இருக்கிறோம்.

இடைவிடாமல் பணியாற்றி

இடைவிடாமல் பணியாற்றி

அவர்கள் மக்கள் விரும்பும் நல்ல நிகழ்ச்சிகளை வழங்க இடைவிடாமல் பணியாற்றி வருகிறார்கள். புதுமையான நிகழ்ச்சிகளை உருவாக்க எங்களை ஊக்குவித்து வரும் தமிழ் பார்வையாளர்களுக்கு இத்தருணத்தில் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பார்வையாளர்களுக்காக

பார்வையாளர்களுக்காக

'எங்க வீட்டு மீனாட்சி' உள்ளிட்ட தொடர் மற்றும் டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன்-2 போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இதன் பார்வையாளர்களுக்காக இந்த சேனல் விரைவில் தொகுத்து வழங்க உள்ளது. இது ஏற்கனவே அதன் பார்வையாளர்களிடையே உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளதோடு அவர்களின் மனதை கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.

விருதுகளின் விபரம்

விருதுகளின் விபரம்

'மேடிஸ் விளம்பர விருதுகள் 2021'-ல் கலர்ஸ் தமிழ் பெற்ற விருதுகள் விவரம் வருமாறு:-

1. தங்கம் - புதுமையான விளம்பர பலகை (Hoarding innovation)
2. வெள்ளி- வெளிப்புற தளத்தை சிறப்பாக பயன்படுத்தியது (Best use of outdoor)
3. வெள்ளி - தனித்துவமான தொலைக்காட்சி நிகழ்ச்சி விளம்பரம் (TV Show Promo)
4. வெண்கலம் - சிறந்த பிரிண்ட் பயன்பாடு (Best use of Print)
5. வெண்கலம் - தொலைக்காட்சியின் ஒருமுறை விளம்பரம் (TV Single Promo)

போட்டி நிலவி வரும்

போட்டி நிலவி வரும்

டி ஆர் பி ரேட்டிங்கில் ஒரு பக்கம் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், இந்த விருதுகள் தான் சந்தோஷத்தை கொடுக்கும் . பல முன்னணி டி வி சேனல்கள் பல யுக்திகளை கையான்டு வருகிறார்கள்.அதற்கு நடுவே சின்ன சந்தோஷங்களும் பாராட்டுகளும் மிகவும் ஊக்குவிக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X