twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் ராதாரவிக்கு 'டத்தோ' விருது: மலேசியாவில் வழங்கப்படுகிறது

    By Mayura Akilan
    |

    Radha Ravi
    சென்னை : நடிகர் ராதாரவியின் சமூக சேவையை பாராட்டியும் 38 ஆண்டுகால திரை உலக வாழ்க்கையை பாராட்டும் வகையிலும் மலேசியா நாட்டில் அவருக்கு டத்தோ பட்டம் வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகனான நடிகர் ராதாரவி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ளார். இவருடைய கலைச்சேவையை பாராட்டி, மலேசியாவில் உள்ள மலாகா நகரில் நவம்பர் 12-ந் தேதி, டத்தோ' பட்டம் வழங்கப்படுகிறது.

    சமூக சேவைக்காக பட்டம்

    ராதாரவி தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்கள் சங்கங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதை பாராட்டியும், அவருடைய 38 ஆண்டு கால கலைத்துறை சேவையை பாராட்டியும், அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வது போன்ற சமூக சேவையை பாராட்டியும் டத்தோ' பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்டத்தை பெறும் முதல் தென்னிந்திய நடிகர், ராதாரவி என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இந்தி நடிகர் சாருக்கானுக்கு, இதற்கு முன்பு டத்தோ' பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

    English summary
    Actor Radha Ravi has been honoured with Dathi award from Malaysia.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X