twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருது விழாவில் மாஸ் காட்டிய மாற்றுத்திறனாளி நடிகர்.. சைகை மொழியால் பேசிய நெகிழ்ச்சி சம்பவம்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: 94வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது.

    சிறந்த துணை நடிகருக்கான விருது கோடா படத்தில் நடித்த மாற்றுத்திறனாளி நடிகர் டிராய் கோட்சர் (Troy Kotsur) என்பவருக்கு வழங்கப்பட்டது.

    செவித் திறன் மற்றும் வாய் பேச முடியாத நடிகர் டிராய் கோட்சர் சைகை மொழி மூலம் பேச அவருக்கான குரல் ஆஸ்கர் மேடையில் கொடுக்கப்பட ஒட்டுமொத்த ஹாலிவுட் பிரபலங்களும் உற்சாக கரவொலி எழுப்பி அவரை கெளரவித்தனர்.

    ஆஸ்கர் விருது விழாவில் தூள் கிளப்பிய டூன்.. சும்மா இத்தனை விருதுகளை அள்ளி அசத்தல்!ஆஸ்கர் விருது விழாவில் தூள் கிளப்பிய டூன்.. சும்மா இத்தனை விருதுகளை அள்ளி அசத்தல்!

    சிறந்த துணை நடிகை

    சிறந்த துணை நடிகை

    ஆஸ்கர் 2022ன் சிறந்த துணை நடிகைக்கான விருதை இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான வெஸ்ட் சைட் ஸ்டோரிஸ் படத்திற்காக அரியனா டி போஸ் வென்றார். இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஃபிளையிங் கிஸ் கொடுத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். கருப்பினத்தவரான அரியனா டி போஸ் விருது பெற்ற மகிழ்ச்சியில் உரையாற்றியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    மாற்றுத்திறனாளி நடிகருக்கு விருது

    மாற்றுத்திறனாளி நடிகருக்கு விருது

    கோடா படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளி நடிகர் டிராய் கோட்சர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்று அசத்தினார். வாய் பேச முடியாதவ மற்றும் காது கேளாத நடிகரான டிராய் கோட்சர் சைகை மொழியில் ஆஸ்கர் விருதை வென்றுவிட்டு பேச அவருக்கு பதில் அருகே ஒரு நபர் அவருக்கு குரல் கொடுக்க ஒட்டுமொத்த அரங்கமே டிராய் கோட்சரை கைதட்டி பாராட்டியது.

    பல விருதுகள்

    பல விருதுகள்

    கோடா படத்தில் ஃபிராங் ரோஸி எனும் மீனவர் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். எமிலியா ஜூன்ஸ் ரூபியின் காது கேளாத தந்தையாக இவர் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி ஏகப்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற நிலையில், ஆஸ்கர் விருதையும் தட்டித் தூக்கி உள்ளார் டிராய் கோட்சர்.

    இரண்டாவது நபர்

    இரண்டாவது நபர்

    ஆஸ்கர் வரலாற்றில் ஏற்கனவே காது கேளாத மாற்றுத்திறனாளி நடிகர் ஒருவர் ஆஸ்கர் விருது வென்ற நிலையில், டிராய் கோட்சர் இரண்டாவது மாற்றுத்திறனாளி நபர் என்பது குறிப்பிடத்தக்கது. சைகை மொழியில் அவர் தனது குடும்பத்துக்கும் தனது மனைவிக்கும் காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்களின் சமூகத்துக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் என்று பேசியது பலரது இதயங்களை நெகிழச் செய்தது.

    English summary
    Deaf actor Troy Kotsur won Best Supporting Actor Award at Oscars 2022. He is the second deaf actor won this prestige Academy Awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X