ஆஸ்கர் விருது விழாவில் தீபிகா படுகோனுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்.. என்ன தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விரைவில் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பதான் படத்தின் மூலம் இந்த ஆண்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொண்டாடி உள்ளார் நடிகை தீபிகா படுகோன்.
ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் தீபிகா படுகோன் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்டு விருதை வழங்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பான் வேர்ல்ட் நடிகை
பாலிவுட் நடிகையாக இருந்து வந்த நடிகை தீபிகா படுகோன் சமீப காலமாக ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் நிலையில், பான் வேர்ல்ட் நடிகையாக மாறி உள்ளார். கான்ஸ் திரைப்பட விழாவில் ஜூரியாக தீபிகா படுகோன் கலந்து கொண்டது இந்திய சினிமா துறைக்கே மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், அடுத்ததாக ஆஸ்கர் விழாவிலும் அவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பதான் படத்தில் வேறலெவல்
இந்த ஆண்டு தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தின் வெற்றிக்கு நடிகை தீபிகா படுகோனின் பிகினி டான்ஸ் மற்றும் கவர்ச்சி நடிப்பு மிகப்பெரிய பிளஸ் ஆக மாறியது.

ஆஸ்கர் விருது கொடுக்கப்போறாங்க
இந்திய பிரபலங்கள் ஆஸ்கர் விருது வாங்குவதே அரிதான விஷயமாக பார்க்கப்படும் நிலையில், நடிகை தீபிகா படுகோன் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதினையே வழங்க போறாங்க என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அகாடமி நிர்வாகம் அறிவித்துள்ளது. நடிகை தீபிகா படுகோனுக்கு இது மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் 13ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் ஆரம்பமாகிறது (இந்திய நேரப்படி).

ஏற்கனவே பிரியங்கா சோப்ரா
முன்னதாக நடிகை பிரியங்கா சோப்ரா ஆஸ்கர் நாமினேஷன் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும், ஆஸ்கர் நிகழ்ச்சியின் ரெட் கார்ப்பெட்டையும் அழங்கரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் தொடர்ந்து ஆஸ்கர் மரியாதையை பெற்று வருகின்றனர்.

பிரபாஸ் படம்
பதான் படத்திற்கு பிறகு ஷாருக்கானின் ஜவான் படத்திலும் தீபிகா படுகோன் கேமியோவாக வரப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான பிராஜெக்ட் கே படத்திலும் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அவதார் ஹீரோயின்
தீபிகா படுகோன் மட்டுமின்றி ஆஸ்கர் விருதுகளை டுவைன் ராக் ஜான்சன், அவதார் பட நடிகை ஜோ சல்டானா மற்றும் ஹாலிவுட் பிரபலங்களான ரிஸ் அகமத், எமிலி பிளன்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டோனி யென் உள்ளிட்ட பல பிரபலங்கள் வழங்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











