பாலிவுட்: தனுஷுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருது!
மும்பை: தனது முதல் பாலிவுட் படமான ராஞ்சனாவுக்காக சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார் தனுஷ்.
2014ம் ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் விழா அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள டாம்பி பே பகுதியில் நடந்தது.
இந்த விழாவில் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது தனுஷுக்கு வழங்கப்பட்டது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்த படம் "ராஞ்சனா" படத்துக்காக இந்த விருது கிடைத்தது. இப்படம் பாலிவுட்டில் தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. அதே படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு "அம்பிகாபதி" என்ற பெயரில் வெளியானது.
பாலிவுட்டில் ரூ 100 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் அம்பிகாபதி இடம்பிடித்ததால் தனுஷுக்கு தொடர்ந்து பாலிவுட் வாய்ப்புகள் வருகின்றன.
தனுஷ் இப்போது பால்கி இயக்கிவரும் படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார். இப்போது கிடைத்துள்ள விருது அவரது அந்தஸ்தை பாலிவுட்டில் மேலும் உயர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











