67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. சிறந்த திரைப்படமாக அசுரன் தேர்வு !
67வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதில்2019 ம் ஆண்டுக்கான சிறந்த படமாக தனுஷ் நடித்த அரசுன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மையத்தில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான "அசுரன்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்திருந்தார்.மேலும் கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை பெற்ற படமாக அசுரன் திகழ்கிறது
இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான 67வது தேசிய விருதுக்கு தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனுஷிற்கு ஏற்கனவே ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறைக்கான சிறந்த மாநில விருது சிக்கிம்முக்கு வழங்கப்படுகிறது. சிறந்த சினிமா விமர்சகருக்கான தேசிய விருது கொல்கத்தாவை சேர்ந்த சோஹினி சட்டோபத்யாயாவுக்கு வழக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக பிஷாக் ஜோதிக்கு வழக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











