விருதுகளை குவித்த அசுரன் படம்... சிறந்த நடிகருக்கான தேசிய விருதுபெற்ற தனுஷ்!

டெல்லி : டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

விழாவில் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த்துடனும் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடனும் கலந்து கொண்டனர்.

தேசிய விருது வழங்கும் விழா

தேசிய விருது வழங்கும் விழா

டெல்லியில் உள்ள விக்யான் பவனின் 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார். இதேபோல நடிகர் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருதினை பெறுகிறார்.

விருது வழங்கிய குடியரசு துணை தலைவர்

விருது வழங்கிய குடியரசு துணை தலைவர்

விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் விருது பெறுபவர்களுக்கு விருதுகளை வழங்கி குடியரசு துணை தலைவர் சிறப்பித்தார்.

சிறந்த தமிழ் படம் அசுரன்

சிறந்த தமிழ் படம் அசுரன்

இந்நிலையில் சிறந்த தமிழ் படமாக அசுரன் படம் தேர்வாகியுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் மிகுந்த ஆரவாரத்திற்கிடையில் வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

Recommended Video

Superstar Rajinikanth Getting 51st DadaSaheb Phalke Award | 67th NATIONAL FILM AWARDS
வெற்றிமாறன் இயக்கம்

வெற்றிமாறன் இயக்கம்

பூமணியின் வெக்கை நாவலை மையமாக கொண்டு அசுரன் படத்தை வெற்றி மாறன் இயக்கியிருந்தார். இந்தப் படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் மிகுந்த வரவேற்பை பெற்றது. தனுஷின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது.

சிறப்பான கூட்டணி

சிறப்பான கூட்டணி

கடந்த 2019ல் வெளியான அசுரன் படம் சாதிய ஒடுக்குமுறைகளை பேசும் படமாக வெளிவந்தது. அப்போதே படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்ற பேச்சு விமர்சகர்களிடையே எழுந்தது. ஏற்கனவே வெற்றிமாறன் -தனுஷ் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படம் தேசிய விருது பெற்ற நிலையில் தற்போது இந்தக் கூட்டணி இரண்டாவது விருதையும் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் பெருமை

தமிழ் சினிமாவின் பெருமை

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பெருமை வெற்றிமாறன் என்று நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பலரும் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர். இதனிடையே நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து பெற்றுள்ளார். இதையடுத்து விழாவில் பங்கேற்ற அவரது மனைவி ஐஸ்வர்யா, மாமனார் ரஜினிகாந்த் மற்றும் மாமியார் லதா ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மெருகேற்றும் தனுஷ்

மெருகேற்றும் தனுஷ்

நடிகர் தனுஷ் படத்திற்கு படம் தன்னுடைய நடிப்பை மெருகேற்றி வருகிறார். ஆடுகளம் மற்றும் தற்போது அசுரன் என இரண்டு தேசிய விருதுகளை சிறந்த நடிகருக்காக பெற்றுள்ளார். தொடர்ந்து ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் என சிறப்பான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X