Don't Miss!
- News
வன்முறையோட வலி தெரியுமா? நான் அனுபவிச்சிருக்கேன் தெரியுமா? ஸ்ரீநகரில் உருக்கமாக பேசிய ராகுல் காந்தி
- Lifestyle
பெண்களே! உங்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கு இவைதான் காரணமாம்...ஜாக்கிரதையா இருங்க..!
- Finance
வெறும் 3 நாளில் ரூ.11.6 லட்சம் கோடி இழப்பு.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்..!!
- Sports
சூர்யகுமாரின் பலவீனம் இதுதான்.. அதை சரி செய்தே தீர வேண்டும்.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்!
- Technology
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
இவரே விருது சிலை போல இருக்காரே.. முதல் விருது கிடைத்த சந்தோஷத்தில் தர்ஷா குப்தா!
சென்னை: சமூக வலைதளை தனது கவர்ச்சி புகைப்படங்களால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தாவுக்கு முதல் விருது கிடைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா.
அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார்.
விஜய் சேதுபதியுடன் 3வது முறையாக இணையும் ராஷி கண்ணா… மக்கள் செல்வனின் பிறந்தநாள் வாழ்த்து

கவர்ச்சி புயல்
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார் நடிகை தர்ஷா குப்தா. சமீபத்தில் மழையில் நனைந்தபடியும் குடையை பிடித்துக் கொண்டும் சென்னை மழையை ரசித்து இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்தன.

முதல் விருது
சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களின் ஆதரவை பெற்றார். தர்ஷா குப்தாவின் அழகில் மயங்கி அவருக்கு ரசிகர்கள் ஹார்ட்டீன்களை போட பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு சினிமாவில் நடித்ததற்காக முதல் விருதும் கிடைத்துள்ளது.

என்ன விருது
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக ருத்ர தாண்டவம் படத்தில் அறிமுகமானார் தர்ஷா குப்தா. அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகை விருதை அள்ளி உள்ளார் தர்ஷா குப்தா. ஃபேப் ஸ்டார்ஸ் எனும் அமைப்பு சென்னையில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடந்த விருது விழாவில் இந்த விருதை அவருக்கு அளித்துள்ளது.

சந்தோஷத்தில் தர்ஷா
முதல் முறையாக சினிமாவில் நடித்ததற்காக விருது பெற்ற சந்தோஷத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விருது பெற்ற புகைப்படங்களை ஷேர் செய்து பகிர்ந்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா. ருத்ர தாண்டவம் படத்தை தொடர்ந்து சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

விருது சிலை போல
கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்து கொண்டு கவர்ச்சிகரமாக விருது விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்ற புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் விருது சிலை போலவே நீங்க இருக்கீங்க தர்ஷா குப்தா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இது ஆரம்பம் தான் மேலும், பல விருதுகள் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.