டார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி

சென்னை: டார்லிங் ஆப் டெலிவிஷன் விருது பெற்றுள்ளார் திவ்யதர்ஷினி. டிடி என்றால் சின்ன குழந்தை முதல் பெரியவர்கள் வரை தெரியும். அந்த அளவிற்கு பிரபலமானவர் திவ்யதர்ஷினி. யாராவது ஒருவர் நம்மை டார்லிங் என்று அழைத்தால் அது நம் மனதிற்கு எவ்வளவு இனிமையாக இருக்கும். அது போல என்னை டார்லிங் ஆப் டெலிவிஷன் என்று பெருமைப்படுத்தியது மிகவும் மன நிறைவாக உள்ளது என்று கூறியுள்ளார் டிடி.

நான் ஒரு விதமான உடைகளை நிகழ்ச்சியில் உடுத்துவன் மூலம் அந்த உடையின் டிசைனர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை கிடைக்கும் என்ற நோக்கில் தான் ஒரு சீசன் அல்லது சீரிஸ் முழுவதும் நான் புடவையில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Dhivyadharshini won Darling of Television Award

சென்னையின் மிகப்பெரிய பிரபலங்களுக்கான ஃபேஷன் ஷோக்களில் ஒன்றான D AWARD மற்றும் DAZZLE STYLE ICON AWARD சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற பீட்டர் ஹெய்ன், நீயா நானா கோபிநாத், நடன பயிற்சியாளர் சாண்டி மாஸ்டர், வாணி போஜன், கேத்தரின் தெரேசா, VJ அஞ்சனா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பல கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில், தற்போது நிறைவு பெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ரன்னர் அப் சாண்டி மாஸ்டர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அவர் தனது மனைவியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது மனைவியுடன் ஜோடியாக மேடையில் ஒரு சிறப்பு நடனமும் ஆடினார். அவர்களின் இந்த கியூட் டான்ஸ் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் பல பிரபலங்களுக்கு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் டார்லிங் ஆப் டெலிவிஷன் விருது DD என்று அழைக்கப்படும் திவ்யா தர்ஷினிக்கு வழங்கப்பட்டது. இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். யாராவது ஒருவர் நம்மை டார்லிங் என்று அழைத்தால் அது நம் மனதிற்கு எவ்வளவு இனிமையாக இருக்கும். ஆது போல என்னை டார்லிங் ஆப் டெலிவிஷன் என்று பெருமைப்படுத்தியது மிகவும் மன நிறைவாக உள்ளது என்றார்.

Dhivyadharshini won Darling of Television Award

மிகவும் அழகான ஒரு உடையில் பங்கேற்ற DD மேடையில் பேசுகையில், ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான ஸ்டைல் தனக்குள் இருக்கும். அதிலும் வயது அதிகமாகும் போது நமக்கு பல பொறுப்புகளும் அதிகமாகின்றன. அதனால் எனது நடைமுறைகள் மூலம் யாருக்காவது உபயோகமாக இருக்கவேண்டும் என்ற சிந்தனை என்னுள் எழுந்தது.

நான் வித விதமான உடைகளை நிகழ்ச்சியில் உடுத்துபவள். இதன் மூலம் அந்த உடையின் டிசைனர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை கிடைக்கும் என்ற நோக்கில் தான் ஒரு சீசன் அல்லது சீரிஸ் முழுவதும் நான் புடவையில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினேன். இந்த வாய்ப்பு மூலம் மிகவும் திறமையான தனித்துவம் வாய்ந்த இளைஞர்களின் படைப்பு வெளியுலகத்திற்கு தெரியவந்தது.

இப்போது அவர்களின் தொழில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது என்பது எனக்கு சந்தோஷம் அளிக்கிறது. இந்த யோசனை இந்த அளவிற்கு வெற்றி பெரும் என்ற நான் நினைக்கவேயில்லை. இதில் மிகவும் சிறப்பு என்னவென்றால் அந்த புடவைகள் அனைத்தும் மிகவும் நியாயமான விலையில் விருப்பப்படும் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் இருக்கும் காட்டன் புடவைகள் தான் என்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் என்றார்.

மேலும் அவருக்கு மிகவும் பிடித்த, அவர் மிகவும் ரசித்த ஒரு ஸ்டைல் ஐகான் என்றால் அது பாலிவுட் குயின் கரீனா கபூர் என்றார். அவரின் ஸ்டைல் மற்றும் பேஷன் DDக்கு மிகவும் பிடிக்குமாம். இது போன்ற பல விருதுகள் பல பிரபலங்களுக்கு அநத நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இது போல பிரபலங்களை கவுரவப்படுத்தும் ஃபேஷன் ஷோகளில் இது மிகவும் பிரபலமானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X