twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    த்ரிஷ்யம் படத்துக்கு கேரள அரசின் சிறந்த திரைப்பட விருது!

    By Shankar
    |

    திருவனந்தபுரம்: மோகன்லால் - மீனா நடித்த த்ரிஷ்யம் படத்துக்கு கேரள அரசின் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'த்ரிஷ்யம்' மலையாள படம் இதுவரை எந்த மலையாளப் படமும் செய்யாத சாதனைகளைச் செய்துள்ளது.

    Dhrishyam gets Kerala state award

    ரூ.4 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது.

    ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள் ஓடிய டைட்டானிக்கின் சாதனையை 'திரிஷ்யம்' முறியடித்துள்ளது. அங்கு 100 நாட்களை தாண்டி இன்னும் இந்தப் படம் ஓடிக் கொண்டு இருக்கிறது.

    தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். தமிழ் ரீமேக்கில் மோகன்லால் நடித்த பாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

    தற்போது 'த்ரிஷ்யம்' படத்துக்கு கேரள அரசு விருது கிடைத்துள்ளது. பிரபலமான சிறந்த படமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 'கிரைம் நம்பர் 89', 'நார்த் 24 காதம்' போன்ற படங்களும் சிறந்த படத்துக்கான கேரள அரசு விருதை பெற்றுள்ளன.

    சிறந்த நடிகருக்கான விருது பகத் பாசில், லால் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. சிறந்த நடிகை விருதை ஆன் அகஸ்டின் பெற்றுள்ளார்.

    English summary
    Mohan Lal's Dhrishyam got the best popular film award from the Govt of Kerala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X