Dadasaheb Phalke Awards - நயன்தாரா மட்டுமில்லை அட்லீக்கும் தாதா சாகேப் பால்கே விருது.. குவியும் வாழ்த்து

மும்பை: இந்திய திரைத்துறையில் கௌரவமான விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது. அந்த விருதை பெறுவதை திரைத்துறையினர் பெருமையாக கருதுவார்கள். இந்தச் சூழலில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் சந்தீப் ரெட்டி வங்கா, நயன்தாரா உள்ளிட்டோர் மட்டுமின்றி அட்லீயுடன் விருது பெற்றார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

இந்திய சினிமாவின் தந்தை என புகழப்படும் தாதா சாகேப் பால்கே முதன்முதலாக முழு நீள திரைப்படத்தை எடுத்தவர். ராஜ ஹரிசந்திராதான் அந்தப் படம். 1913ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் நடிப்பதற்கு யாருமே முன்வரவில்லை. இதனையடுத்து தனது குடும்ப உறுப்பினர்களையே அந்தப் படத்தில் நடிக்க வைத்தார் அவர். அந்தப் படத்துக்கு பிறகு மோகினி பஸ்மஸுர், சத்யவான் சாவித்திரி உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவர் 1974ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

 Director Atlee Got Dadasaheb Phalke Award For Jawan Movie


கௌரவ விருது: திரைத்துறையில் தாதா சாகேப் பால்கே பெயரில் வழங்கப்படும் விருது உச்சமாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து ரஜினிகாந்த், பாலசந்தர் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்த விருதை வாங்கியிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க இந்த வருடத்துக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்று நடந்தது. இதில் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விருதுகள் யார் யாருக்கு: அதன்படி சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் அவருக்கு மூன்று ஹிட் படங்கள் அமைந்தன. பதான், ஜவான், டன்கி என அவர் நடித்த படங்கள் சக்கைப்போடு போட்டன. முக்கியமாக தமிழ்நாட்டிலிருந்து சென்று ஜவான் படத்தின் மூலம் தங்களுக்கான இடத்தை பாலிவுட்டில் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் அட்லீயும், நயன்தாராவும்.

சிறந்த நடிகை நயன்தாரா: அதேபோல் ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஹிந்தியில் நடித்த முதல் படத்திலேயே இப்படியான கௌரவமான விருதை பெற்ற நயன் தாராவை பலாரும் பாராட்டுகிறார்கள். முக்கியமாக அவர் மஞ்சள் சேலை அணிந்து சென்று ரொம்பவே அழகாக, சிம்ப்பிளாக விருதினை பெற்றுக்கொண்டது அங்கிருந்தவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லீக்கும் விருது: அதேபோல் அனிமல் பட வில்லன் பாபி, இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்டோரும் அந்த விருதினை பெற்றனர். இந்நிலையில் அட்லீக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது. கறுப்பு கலர் ட்ரெஸ்ஸில் படு கேஷுவலாக சென்று அந்த விருதை பெற்றுக்கொண்டார் அட்லீ. ஜவான் படத்துக்காக அவருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டது. முதல் ஹிந்தி படத்திலேயே வசூல், விருது என அள்ளிய அட்லீக்கு தமிழ் திரைத்துறையினர் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X