twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கியது Directors Club... பிரபலங்கள் பாராட்டு

    |

    சென்னை: Directors Club என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

    கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக உதவி இயக்குநர் சக்தி என்பவர் மூலம் வாட்ஸ் ஆப் செயலியில் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுவில் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர்.

    பாலிவுட் இயக்குநர் ரஜினியுடன் சந்திப்பு... ரஜினி-இளையராஜா -பால்கி கூட்டணியில் புதிய படம்? பாலிவுட் இயக்குநர் ரஜினியுடன் சந்திப்பு... ரஜினி-இளையராஜா -பால்கி கூட்டணியில் புதிய படம்?

    இயக்குனர்கள மணிரத்னம், SS ராஜமௌலி, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், ரவிவர்மன், கதாநாயகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் என சினிமாவின் அனைத்து துறையினரும் இக்குழுவில் வந்து உதவி இயக்குநர்களோடு கலந்துரையாடி வருகின்றனர்,

    எண்ணற்ற பிரபலங்கள்

    எண்ணற்ற பிரபலங்கள்

    உதவி இயக்குனர்களுக்கு ஒரு அரிய களமாகவும், அவர்களுக்கு இலவச பயிற்சி பட்டறையாகவும் விளங்கும் Directors Club குழுமம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.Directors Club நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் 17.12.2021 வெள்ளிக்கிழமை அன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மற்றும் நடிகர் SA சந்திரசேகர் , இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து ,மற்றும் நடிகர் காளி வெங்கட் உட்பட எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில்

    இவ்விழாவில்

    கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, CSI காது கேளாதோர் பள்ளி சார்பில் வாய் பேசமுடியாத மற்றும் காது கேளாத குழந்தைகள் நடத்திய நாட்டிய நிகழ்வு அனைவர் மனதையும் கவர்ந்தது. இதனையடுத்து, 2020 மற்றும் 2021 ஆண்டில் வெளியான திரைப்படங்களில் ஒரு சிறந்த படத்தை Director's club, உறுப்பினர்கள் வாக்கு அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அதில் பணியாற்றிய உதவி இயக்குநர் குழுவிற்கு, விழாவில் விருது வழங்கும் விதமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை திரைப்பட உதவி இயக்குநர் குழுவிற்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    அரசு அங்கீகாரம்

    அரசு அங்கீகாரம்

    இந்தியாவிலேயே உதவி இயக்குநர்கள் அங்கிகரிகப்படுவதும் அவர்களுக்கு விருது வழங்கப்படுவதும் இதுவே முதல் முறை. இந்த ஆண்டின் நிறைவில் Director's Club அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. உதவி இயக்குநர்களுக்கான இலவச பயிற்சி பட்டறையாகவும், அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் களமாகவும் செயல்பட்டு வருகிறது.நாளைய இயக்குர்களை எப்படி பாதுகாக்க வேண்டும்,வழி நடத்த வேண்டும்,எப்படி பட்ட சூழலிலும் இந்த இயக்குனர் சமுதாயம் என்ன செய்ய வேண்டும் என்று பல திட்டங்கள் தீட்டி வருகிறது. பிரபலங்கள் பலர் இந்த அமைப்பை பாராட்டி வருகின்றனர் .

    நாளைய இயக்குனர்களை

    நாளைய இயக்குனர்களை

    சென்னை வளசரவாக்கத்தில் இணை, துணை இயக்குனர்களுக்கான சங்கம் (tantis ) என்கின்ற அமைப்பு பல ஆண்டுகளாக - தலைவர், பொருளாளர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் என்று ஒரு மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஒரு சங்கமாக பல நல்ல விஷயங்கள் செய்து வருகின்றனர். இப்படி ஒரு சங்கம் இருக்கும் அதே சூழலில் டைரக்டர்ஸ் கிளப் என்கின்ற இந்த அமைப்பும் நாளைய இயக்குனர்களை கௌரவப்படுத்தும் விதமாக பல புது விஷயங்களை சிந்தித்து செயல்படு க்ரியேட்டிவ் ஐடியாஸ் மூலம் அனைத்து இயக்குனர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் ஒரு புதிய சக்தியையும் தைரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட அமைப்புகளை பலரும் கைகொடுத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சினிமா சங்கங்கள் என்று எடுத்துக்கொண்டால் உதவி இயக்குனர்களுக்காக நடத்தப்படும் சங்கங்கள் நிதிப்பற்றாக்குறை எப்பொழுதும் இருக்கும் . அதையும் தாண்டி வெற்றி பெறுவது எப்படி என்பது தான் எல்லோருடைய கனவும் ஆசையும் .

    English summary
    Directors Club Gave Awards Assistant Directors For First Time in History
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X