கனவு தேவதை நமீதா!
சென்னையைச் சேர்ந்த ஸ்பெல் பெளன்ட் என்ற நடன நிறுவனம் நமீதாவை, இந்த ஆண்டின் கனவு தேவதையாக தேர்வு செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஸ்பெல் பெளன்ட் நிறுவனம் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான விருதினை அறிவித்துள்ளது. இதில் இந்த ஆண்டின் கனவு தேவதையாக நமீதாவை தேர்வு செய்துள்ளனர்.இப்படி ஒரு விருது இந்தியாவிலேயே இப்போதுதான் முதல் முறையாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை மாலை விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
விருது பெற்ற மற்றவர்கள்:
சிறந்த படம் - வெயில்.
சிறந்த படம் சிறப்பு விருது - உனக்கும் எனக்கும், இம்சை அரசன் 23வது புலிகேசி.
சிறந்த நடிகை - ஜெனீலியா (சென்னை காதல்)
சிறப்பு நடிகை சிறப்பு விருது - சந்தியா (வல்லவன்)
சிறந்த நடிகர் சிறப்பு விருது - பரத் (எம் மகன்)
சிறந்த குணச்சித்திர நடிகர் - பசுபதி (வெயில்)
சிறந்த குணச்சித்திர நடிகை - சரண்யா (எம் மகன்)
சிறந்த இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா.
சிறந்த பாடலாசிரியர் - நா. முத்துக்குமார்.
சிறந்த இயக்குநர் - வசந்த பாலன் (வெயில்)
வாழ்நாள் சாதனையாளர் விருது காக்கா ராதாகிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











