twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நேர்கொண்ட பார்வை அபிராமிக்கு எடிசன் அவார்டு.. ரங்கராஜ் பாண்டேக்கும் விருது

    |

    சென்னை: சிறந்த துணை நடிகைக்கான விருது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்காக அபிராமிக்கு வழங்கப்பட்டது.

    எடிசன் விருது வழங்கும் விழா கடந்த 12 வருடமாக சென்னையில் நடந்து வருகிறது. இதில் 13வது எடிசன் விருதுகள் வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது .இதில் பல தலைப்புகளின் கீழ் பல விருதுகள் பல நட்சத்திரங்களுக்கு வழங்கபட்டது .

    Edison award for abirami

    எடிசன் விருதுகளில் யாரும் எதிர்பாராத வகையில் நேர்கொண்ட பார்வை படம் கௌரவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு எந்த விருதும் இதுவரை வழங்கவில்லை என ரசிகர்கள் வேதனை தெரிவித்து இருந்தனர். தற்போது அந்த கவலையை போக்கும் வகையில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு விருதுகள் கிடைத்துள்ளது .

    Recommended Video

    NKP Fight making Scene:Ajithதின் நல்ல மனசு யாருக்கு Sir வரும்

    இதில் சிறந்த துணை நடிகைகான விருதை நேர்கொண்ட பார்வை படத்திற்காக அபிராமி வென்றிருக்கிறார். சிறந்த வில்லனுக்கான க்ரிடிக்ஸ் விருதை அறிமுக நடிகர் மற்றும் நேர்கொண்ட பார்வை படத்தின் வில்லனான ரங்கராஜ் பாண்டே வென்றிருக்கிறார்.

    வாவ்.. பால் போல மேனிம்பாங்களே அது இதுதானா.. நடிகையின் அசரடிக்கும் போட்டோ.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!வாவ்.. பால் போல மேனிம்பாங்களே அது இதுதானா.. நடிகையின் அசரடிக்கும் போட்டோ.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

    சிறந்த வில்லனுகான விருதை எல்லோரும் எதிர்பார்ததை போல நடிகர் அர்ஜீன் தாஸ் வென்றிருக்கிறார் கைதி படத்திற்காக சிறந்த வில்லனுக்கான விருது வழங்கப்பட்டது.

    Edison award for abirami

    சிறந்த இசையமைப்பாளர் க்ரிடிக்ஸ் விருதை ஜீ.வி.பிரகாஷ் அசுரன் படத்திற்காக வென்றிருக்கிறார் .அசுரன் படத்திற்கு ஜீவி கொடுத்த இசை அவரின் சினிமா வரலாற்றில் சிறந்த பின்னணி இசை என்று கூட கூறலாம் .அந்த அளவுக்கு ரசிகர்களின் பேராதரவை அசுரன் படம் பெற ஜீவியும் ஒரு அங்கம் .

    சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை அசுரன் படத்திற்காக வேல்ராஜ் வென்றார். வேல்ராஜ் அசுரன் படத்திலே ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இவர் வேலையில்லா பட்டதாரி மற்றும் தங்கமகன் படங்களின் இயக்குனரும் கூட .சிறந்த ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் பல படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்து இருக்கிறார்.

    இன்சிபிரேஷன் ஆப் யூத் ஐகான் விருது சிங்கப்பெண்ணான இந்திரஜா சங்கருக்கு கிடைத்தது .இந்த விருதை தனது அப்பா ரோபோ சங்கர் மற்றும் அம்மாவுடன் இனைந்து பெற்று கொண்டார் அந்த தருணம் அவருக்கு ஒரு நெகிழ்ச்சி மிகு தருனமாகவே இருந்தது .

    சிறந்த துணை நடிகருக்கான விருதை கென் கருணஸ் வென்றிருந்தார் இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றே கூறலாம். அசுரன் படத்தில் அவர் சிதம்பரம் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது .மேலும் இசையமைப்பாளரான டி.இம்மானுக்கு மியூசிக்கில் சிஷர் ஆப் தமிழ் சினிமா விருது வழங்கபட்டது.

    English summary
    Edison award for abirami
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X