சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருது... தட்டித் தூக்கிய என்கான்டோ படம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை என்கான்டோ படம் பெற்றுள்ளது. இதையடுத்து அந்தப் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

94வது ஆஸ்கர் விருதுகள்

94வது ஆஸ்கர் விருதுகள்

94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிலையில், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி, சிறந்த வெளிநாட்டுப் படம் என 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு பிரிவுகளில் விருதுகள்

பல்வேறு பிரிவுகளில் விருதுகள்

மேலும் சிறந்த அனிமேஷன் படம், சிறந்த அனிமேஷன் குறும்படம், சிறந்த டாக்குமென்டரி படம் என்ற பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருது வழங்கும் விழா வழக்கம்போல பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டுள்ளது. கடந்த மாதமே நடைபெறவிருந்த விழா கொரோனா காரணமாக இந்த மாதம் நடத்தப்பட்டுள்ளது.

3 பெண் தொகுப்பாளர்கள்

3 பெண் தொகுப்பாளர்கள்

கடந்த 4 ஆண்டுகளாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு இந்த விழாவை வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஆஸ்கர் விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுதான் முதன்முறை.

சிறந்த படமாக கோடா தேர்வு

சிறந்த படமாக கோடா தேர்வு

இதில் சிறந்த படமாக கோடா படம் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதை தட்டியுள்ளது. அதேபோல சிறந்த நடிகராக வில் ஸ்மித், சிறந்த நடிகையாக ஜெசிகா சாஸ்டைன் விருதுகளை பெற்றனர். சிறந்த வெளிநாட்டு படமாக ஜப்பானின் ட்ரைவ் மை கார் படம் விருதை பெற்றது.

சிறந்த அனிமேஷன் படம் என்கான்டோ

சிறந்த அனிமேஷன் படம் என்கான்டோ

இதேபோல சிறந்த அனிமேஷன் படமாக என்கான்டோ தேர்வாகியுள்ளது. இந்த பிரிவில் ஃப்ளீ, லூகா, தி மிட்செல்ஸ் வெஸ் தி மெஷின்ஸ் மற்றும் ரயா அண்ட் தி லாஸ்ட் ட்ராகன் போன்ற படங்கள் போட்டியிட்ட நிலையில் என்கான்டோ படம் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது.

இரட்டை இயக்குநர்கள்

இரட்டை இயக்குநர்கள்

படத்தை ஜேர்ட் புஷ் மற்றும் பைரன் ஹாவர்ட் இணைந்து இயக்கியுள்ளனர். கடந்த நவம்பர் மாதத்தில் திரையிடப்பட்ட இந்தப் படம் சிறந்த வசூல்மழையையும் விமர்சன ரீதியாக சிறப்பான கமெண்ட்களையும் பெற்றுள்ளது. ஒரு 16 வயது சிறுமி தன்னுடைய குடும்பத்தில் தன்னுடைய இருப்பை தேடும் பயணமாக இந்தப் படம் சொல்லப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் மகிழ்ச்சி

இயக்குநர்கள் மகிழ்ச்சி

இந்நிலையில் இந்த விருது கிடைத்தது குறித்து படத்தின் இயக்குநர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நேரிலும் சமூக வலைதளங்களிலும் சிறப்பான வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. அனிமேஷன் மூலம் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் இந்தப் படம் மூலம் அவர்கள் கவர்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X