twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எடிசன் விருதுகள்: சிறந்த படம் எந்திரன்!

    By Shankar
    |

    சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரனுக்கு சிறந்த படத்துக்கான எடிசன் விருது வழங்கப்பட்டது.

    ஆண்டுதோறும் வழங்கப்படும் எடிசன் விருதுகளின் 4-ம் ஆண்டு விழா நேற்று சென்னை லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நடந்தது.

    ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்ற இந்த விழாவில், சிறந்த படத்துக்கான விருதினை ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரனுக்கு வழங்கினர்.

    சிறந்த நடிகருக்கான விருது விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்காக சிம்புவுக்கு வழங்கப்பட்டது. இயக்குநர்கள் வெங்கட் பிரபு, விஜய் மற்றும் பேரரசு மூவரும் இணைந்து இந்த விருதினை அவருக்கு வழங்கினர்.

    இதே படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது த்ரிஷாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த புதுமுக நடிகைக்கான விருது மைனா படத்தில் நடித்ததற்காக அமலா பாலுக்கு வழங்கப்பட்டது.

    சிறந்த இயக்குநராக மதராஸப்பட்டணம் படத்துக்காக இயக்குநர் விஜய்க்கு வழங்கப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது நான் மகான் அல்ல படத்துக்காக ஜெயப்பிரகாஷுக்கும், குணச்சித்திர நடிகை விருது தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்காக சரண்யாவுக்கும் வழங்கப்பட்டது.

    எவர்கிரீன் நடிகை விருது நடிகை சினேகாவுக்கு வழங்கப்பட்டது.

    சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருது ஆர்த்தி கணேஷுக்கும், சிறந்த வில்லன்களுக்கான விருது நான் மகான் அல்ல படத்தில் நடித்த நான்கு புதுமுக இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் சினிமா விருது வரலாற்றில் நான்கு பேருக்கு சிறந்த வில்லன் விருது வழங்கப்பட்டது இதுவே முதல்முறை.

    நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது காதல் கோட்டை புகழ் பாபி மாஸ்டர் அமைத்த நடனம்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்மூவீஸ் செல்வகுமார், பிஆர்ஓ ஜான் ஆகியோர் செய்திருந்தனர்.

    English summary
    Super Star Rajini starrer, Shankar's Enthiran won an award in best film category in a colourful annual Edison Film awards, held in Chennai on Saturday evening.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X