நான் உயிரோடு இருப்பதற்கு ரசிகர்கள்தான் காரணம் என பாடகி சுசீலா உருக்கம்!
புதுச்சேரி: நான் உயிரோடு இருப்பதற்கு ரசிகர்கள் தான் காரணம் என பாடகி சுசீலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கம்பன் கழகத்தின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் 54-வது கம்பன் விழா கம்பன் விழாவின் 3-ம் நாள் விழா கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிந்தனை அரங்கம், பாராட்டரங்கம், கவியரங்கம் உள்ளிட்டவைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வளர்கள், தமிழ்க்கவிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கம்பன் விழாவில் பிரபல பின்னணி பாடகி சுசிலாவிற்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுசீலாவுக்கு விருது
இதில் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் ஷாஜகான் மற்றும் கம்பன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பின்னணி பாடகி சுசிலாவிற்கு முதலமைச்சர் நாராயணசாமி கம்பன் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

மயூசிக் தெரபி மையம்
மேலும் அவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டன. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நாராயணசாமி, வெளிநாடுகளில் உள்ளதைப்போன்று புதுச்சேரியிலும் மியூசிக் தெரபி மையம் அமைக்க இசையமைப்பாளர் இளையராஜா வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அதன்படி புதுச்சேரியில் விரைவில் மியூசிக் தெரபி மையம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ரசிகர்கள்தான்
இந்த விழாவில் ஏற்புரையாற்றிய பாடகி சுசீலா, ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு பாடல்களை பாடி அசத்தினார். இருப்பினும் கடும் வெயிலில் பயணித்த என்னால் தொடர்ந்து பாடமுடிவில்லை என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்ட சுசிலா, எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் தற்போது இளையராஜா மகனின் இசை வரை பாடிக்கொண்டிருப்பது பல தலைமுறைகளை தாண்டியும் இன்னும் எனக்கு கடவுள் அருளால் ரசிகர்கள் இருப்பது தான் என தெரிவித்தார்.

சுசீலா உருக்கம்
தொடர்ந்து பேசிய அவர், சுசீலா இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் அது ரசிகர்கள் புகழ்வதால்தான் என்றும், தங்களை பற்றி அதிகம் அவர்கள் நினைப்பதுதான் எங்களின் ஆயுள் கூடி வருவதாகவும், இந்த ஜென்மம் போல் வேறு ஜென்மங்கள் இருக்குமா என்று தெரியாது என உருக்கமாக கூறினார் சுசீலா.


Click it and Unblock the Notifications











