Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பால்கே விருது... பாராட்டு மழையில் பாலச்சந்தர்!!

இந்திய திரைப்பட துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாலச்சந்தரின் பங்களிப்புக்காக வழங்கியதற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலச்சந்தருக்கு தங்க தாமரையும், ரூ. 10 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும்.
எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் படம் மூலம் வசனகர்த்தாவாக பாலச்சந்தர் அறிமுகமானார். அதன் பிறகு பல சாதனைகள் செய்தார்.
ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்...
விருது பெற்றது குறித்து பாலச்சந்தர் கூறும்போது, "சிவாஜிக்கு பிறகு எனக்கு இவ்விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதை தமிழ் ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்", என்றார். பாலச்சந்தருக்கு நடிகர்கள், இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராணா படப்பிடிப்பு துவக்கிழாவில் பாலச்சந்தர் கலந்து கொண்டபோதுதான் இந்த செய்தி வெளியானது. உடனே, படக்குழுவினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ரஜினிகாந்த்:
சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் ஆளாக பாலச்சந்தருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்த விருது மூலம் தமிழ் சினிமாவையே பெருமைப்படுத்திவிட்டார் கேபி சார், என்றார் ரஜினி.
கமல்ஹாஸன்:
பாலச்சந்தருக்கு இவ்விருது தாமதமாக கிடைத்துள்ளது. விருது கமிட்டியில் நான் இருந்திருந்தால் ஏக் துஜே கேலியே படத்துக்கு முன்பே கொடுத்திருப்பேன். விருது கொடுத்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் கூறும்போது, இயக்குனர் பாலச்சந்தருக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது கிடைத்ததன் மூலம் அவ்விருதுக்கு அழகும் அர்த்தமும் கிடைத்துள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த கவுரவத்தால் திரையுலகமே பெருமை பெற்றுள்ளது, என்றார்.
மேலும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பிலிம் சேம்பர் தலைவ்ர கேஆர்ஜி, பெப்ஸி தலைவர் விசிகுகநாதன் உள்ளிட்ட அனைத்து சினிமா சங்க தலைவர்களும் பாலச்சந்தருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
பாராட்டு விழா:
தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடத் திரையுலகினர் பாலச்சந்தருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
பால்கே விருது பெற்ற பாலச்சந்தருக்கு அனைத்து மொழி சினிமா கலைஞர்களும் பங்கேற்கும் விதத்தில் விரைவில் பாராட்டு விழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.