»   »  பிரான்ஸ் விழாவில் தமிழ் குறும்படம் !

பிரான்ஸ் விழாவில் தமிழ் குறும்படம் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரான்சின் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், சுனாமியை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட் தமிழ் குறும்படமானநீலம் திரையிடப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 58வது திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் சர்வதேச அளவிலான பல்வேறு திரைப்படங்கள் போட்டியில் உள்ளன.

நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தத் திரைப்பட விழாவைத் தொடங்கி வைத்தார். இந்தத் திரைப்பட விழாவின் நடுவர்களில் ஒருவராகநடிகை நந்திதா தாஸ் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேன்ஸ் விழாவில் தமிழிலிருந்து நீலம் என்ற குறும்படமும் கலந்து கொண்டுள்ளது. சுமார் 10 நிமிடமே ஓடக் கூடிய இந்தப்படத்தை பிரபல கவிஞர் அறிவுமதி இயக்கியுள்ளார். தங்கர் பச்சான் ஒளிப்பதிவு செய்துள்ளார், நிரு இசையமைத்துள்ளார்.

சுனாமியால் தாய் தந்தையை இழந்த சிறுவனின் அவலத்தை சித்தரிக்கிறது இந்தப் படம். அந்தச் சிறுவனாக தங்கர்பச்சானின் மகன்அரவிந்த் பச்சான் நடித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil