மறைந்த நடிகர் இர்ஃபான் கானுக்கு 2 விருதுகள்.. ஃபிலிம்ஃபேர் 2021ல் விருதுகளை குவித்த டாப்சி படம்!

மும்பை: பாலிவுட் பிரபலங்களுக்கு வழங்கப்படும் ஃபிலிம்ஃபேர் விருது 2021 நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

மறைந்த நடிகர் இர்ஃபான் கானுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

நடிகை டாப்சியின் தப்பட் திரைப்படம் ஏகப்பட்ட விருதுகளை வென்றது. ஃபிலிம்ஃபேர் விருதுகளில் விருதுகளை வென்றவர்கள் பட்டியல் குறித்து இங்கே காண்போம்.

66வது ஃபிலிம்ஃபேர்

66வது ஃபிலிம்ஃபேர்

மும்பையில் சனிக்கிழமை இரவு 66வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் நடைபெற்றது. பாலிவுட் படங்களுக்கான விருது விழாவான இதில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். கவர்ச்சி உடைகளில் நடிகைகள் விழாவை அலங்கரிக்க விழா மேடை களைகட்டியது. கொரோனா பரவல் காரணமாக சில படங்களே ரிலீஸ் ஆனாலும், அதில் சிறந்த படங்களுக்கான விருதுகளை தரும் விழாவாக இது அமைந்தது.

மறைந்தும் விருது

மறைந்தும் விருது

பாலிவுட்டின் சிறந்த நடிகரான இர்ஃபான் கான் ஹாலிவுட்டில் வெளியான லைஃப் ஆஃப் பை படம் வரை நடித்து அசத்தியவர். கடந்த ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆங்கிரேஸி மீடியம் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இரண்டு விருதுகள்

இரண்டு விருதுகள்

53 வயதிலேயே உயிர்நீத்த நடிகர் இர்ஃபான் கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதுடன் சேர்ந்து வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. அந்த இரு விருதுகளையும் அவரது மகன் பாபில் விழா மேடையில் உருக்கத்துடன் பெற்று சென்றார். ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களும் எழுந்து நின்று கை தட்டி இர்ஃபான் கானுக்கு இன்னொரு முறை புகழஞ்சலி செலுத்தினர்.

டாப்சி படம்

டாப்சி படம்

நடிகை டாப்சி நடிப்பில் வெளியான தப்பட் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது. அந்த படத்தில் நடித்த டாப்சிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த எடிட்டிங் என ஏகப்பட்ட விருதுகளை டாப்சி படம் குவித்தது.

அமிதாப் பச்சனுக்கு விருது

அமிதாப் பச்சனுக்கு விருது

அமேசான் பிரைமில் வெளியான குலாபோ சித்தாபோ படத்திற்காக சிறந்த நடிகர் (ஜூரி) விருது நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. தான்ஹாஜி படத்தை இயக்கிய இயக்குநர் ஓம் ராவத்துக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும் அந்த படத்தில் நடித்த நடிகர் சைஃப் அலி கானுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. மேலும், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X