பிலிம்ஃபேர் விருதுகள்: சிறந்த நடிகர் தனுஷ், நடிகை சமந்தா

By Siva

ஹைதராபாத்: ஐடியா 60வது பிலிம்ஃபேர் விருது விழாவில் தமிழில் சிறந்த நடிகர் மற்றும் பாடகருக்கான விருதை பெற்றார் தனுஷ்.

தென்னிந்திய திரைப்பட விருது விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று பிலிம்ஃபேர் விருது விழா. ஐடியா 60வது பிலிம்பேர் விருது விழா ஹைதராபாத்தில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் விருது வாங்கிய தமிழ் கலைஞர்களைப் பார்ப்போம்.

தனுஷ்

தனுஷ்

சிறந்த நடிகருக்கான விருது 3 படத்திற்காக தனுஷுக்கு கிடைத்தது. மேலும் 3 படத்தில் வந்த கொலவெறி பாடலுக்காக தனுஷுக்கு சிறந்த பாடகருக்கான விருதும் கிடைத்தது.

சமந்தா

சமந்தா

சிறந்த நடிகைக்கான விருது நீ தானே என் பொன்வசந்தம் படத்திற்காக சமந்தாவுக்கு கிடைத்தது. மேலும் தெலுங்கிலும் சிறந்த நடிகைக்கான விருதை ஈகா படத்திற்காக சமந்தா பெற்றார்.

வழக்கு எண் 18/9

வழக்கு எண் 18/9

சிறந்த படத்திற்கான விருதை வழக்கு எண் 18/9 பெற்றது.

பாலாஜி சக்திவேல்

பாலாஜி சக்திவேல்

வழக்கு 18/9 படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருது பாலாஜி சக்திவேலுக்கு கிடைத்தது.

தம்பி ராமையா

தம்பி ராமையா

சிறந்த துணை நடிகருக்கான விருதை கும்கி படத்திற்காக தம்பி ராமையா பெற்றார்.

சரண்யா

சரண்யா

நீர்பறவை படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை சரண்யா பொன்வண்ணன் பெற்றார்.

டி. இமான்

டி. இமான்

கும்கி படத்திற்காக டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது.

யுகபாரதி

யுகபாரதி

கும்கி படத்தில் வரும் சொல்லிட்டாலே பாடலை எழுதிய யுகபாரதிக்கு சிறந்த பாடல் ஆசிரியர் விருது கிடைத்தது.

ரம்யா

ரம்யா

நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் வரும் சற்று முன்பு பாடலை பாடிய என்.எஸ்.கே. ரம்யா சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்றார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

சிறந்த புதுமுக நடிகருக்கான விருது ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது.

லக்ஷ்மி மேனன்

லக்ஷ்மி மேனன்

சுந்தரபாண்டியன் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த லக்ஷ்மி மேனனுக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான விருது கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X