ஃபிலிம் ஃபேரில் 8வது விருது.. ட்வீட் போட்ட தனுஷ்.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: 66வது ஃபிலிம் ஃபேர் விருது நேற்று இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர்கள் முழுவதும் இந்த விழாவில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர்.

இந்த விழாவில் வடசென்னை படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது.

மதுரையில் தனுஷ் ஷூட்டிங்கில் இருப்பதால், இந்த விருதை அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் நேரில் சென்று வாங்கியுள்ளார்.

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபிலிம் ஃபேர் விருது போட்டோவை ட்வீட்டாக போட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

8வது முறை

2018ம் ஆண்டு வெளியான வடசென்னை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு 66வது ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. ஷூட்டிங்கில் பிஸியாக தனுஷ் இருப்பதால், அவரது மனைவி மற்றும் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ராஜேஷ் விருதினை பெற்றுக் கொண்டார். நள்ளிரவில் விருது புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் தனுஷ் 8வது முறையாக ஃபிலிம் ஃபேர் விருது பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது போதும் தலைவா

தனுஷின் இந்த விருது ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தனுஷின் ட்வீட்டுக்கு கீழே பல ரசிகர்கள் விருது பெற்றதற்கு வாழ்த்துக்களையும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த ரசிகர், இது போதும் தலைவா என கமெண்ட் செய்துள்ளார்.

வாழ்த்துக்கள் தலைவரே

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் என 4 படங்களுமே சிறந்த படங்களாகவும் விருதுகளை வாரிக் குவிக்கும் படங்களாகவும் அமைந்துள்ளன. இந்நிலையில், வடசென்னை படத்திற்கு கிடைத்துள்ள விருதுக்கு இந்த ரசிகர் வாழ்த்துக்கள் தலைவரே என தனுஷ், வெற்றிமாறன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தனது வாழ்த்தினை கூறியுள்ளார்.

இன்னொரு ரூம்

இன்னொரு ரூம் ரெடி பண்ணி வை தலைவா.. அவார்டு வந்துட்டே தான் இருக்கும் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

வாழ்த்துக்கள்

நடிகர் தனுஷுக்கு பதிலாக அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் விருதினை பெறும் புகைப்படங்களை பகிர்ந்து இந்த ரசிகை வாழ்த்துக் கூறியுள்ளார்.

வேற என்ன வேணும்

இதை விட எங்களுக்கு வேற என்ன வேணும் லவ் யூ தலைவா இந்த ரசிகர் மொரட்டு தமிழன் டா போஸ்டரை போட்டு தனது உற்சாகத்தை தெரிவித்துள்ளார்.

அடுத்த வருஷம் அசுரனுக்கு

இந்த வருஷம் வடசென்னை படத்துக்கு ஃபிலிம் ஃபேர் விருது பெற்ற நடிகர் தனுஷ், அடுத்த வருஷம் நிச்சயம் அசுரன் படத்துக்காகவும் ஃபிலிம் ஃபேர் விருதினை வெல்வார் என இந்த ரசிகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெற்றி மீது வெற்றி

மாஸ் தலைவா.. வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் செல்வராகவன் சார், வெற்றிமாறன் சார்-ஐ சேரும் என இந்த ரசிகர் பாட்டாவே பாடிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X