கோல்டன் குளோப் விருதுகள் 2021: சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்றது 'நோமட்லேன்ட்' !

சென்னை: சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோப் விருதை நோமட்லேன்ட் படத்திற்காக சோலோ ஜாவோ தட்டிச் சென்றுள்ளார்.

78வது கோல்டன் குளோப் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

எல்லாவற்றையும் பாதித்தது போல விருது விழாவையும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதனால் இரண்டு மாதங்கள் தாமதமாக விருது விழா நடைபெறுகிறது.

கோல்டன் குளோப் விருது

கோல்டன் குளோப் விருது

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உலகம் முழுக்கவும் இருந்து நாமினிகள் பங்கேற்றுள்ளனர். நியூயார்க்கில் உள்ள ரெயின்போ ரூம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸின் பெவர்லி ஹில்ஸில் உள்ள பெவர்லி ஹில்டன் ஆகிய இடங்களில் கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

படங்களை கவுரவித்து..

படங்களை கவுரவித்து..

பிப்ரவரி 3 ஆம் தேதி கோல்டன் குளோப் விருதுக்கான நாமினிகள் வெளியிடப்பட்டன. இந்த முறை, ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷன் அமைப்பு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கவுரவிக்கும் வகையில் விழாவை நடத்தி வருகிறது.

நோமட்லேன்ட் படம்

நோமட்லேன்ட் படம்

இதில் சிறந்த டிராமா படத்திற்கான கோல்டன் குளோப் விருதுக்கு தி ஃபாதர், மாங்க், நோமட்லேன்ட், ப்ராமிஸிங் யங் வுமன், தி ட்ரையல் ஆஃப் தி சிகாகோ 7, ஆகிய படங்கள் நாமினேட் செய்யப்பட்டன. இதில் நோமட்லேன்ட் படம் வெற்றி பெற்றது. இதேபோல் சிறந்த இசை மற்றும் காமெடி படத்திற்கான விருதை போரன்ட் சப்ஸ்சீக்குவன்ட் மூவிஃபிலிம் தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

இதேபோல் சிறந்த நடிகருக்கான விருதை சாத்விக் போஸ்மேன், மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம் படத்திற்காக பெற்றுள்ளார். இதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை தி யூனைட்டெட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லி ஹாலிடே படத்திற்காக ஆன்ட்ரா டே தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த நடிகை இசை மற்றும் காமெடி

சிறந்த நடிகை இசை மற்றும் காமெடி

சிறந்த நடிகர் இசை மற்றும் காமெடிக்கான பட்டியலில் போரட் சப்ஸ்சீக்குவன்ட் மூவிஃபிலிம் படத்திற்காக நடிகர் சச்சா பரோன் கோஹென் பெற்றுள்ளார். இதேபோல் சிறந்த நடிகை இசை மற்றும் காமெடிக்கான விருதை ரோசாமுன்ட் பைக், ஐ கேர் அ லாட் என்ற படத்திற்காக பெற்றார்.

சிறந்த இயக்குநர்..

சிறந்த இயக்குநர்..

சிறந்த துணை நடிகருக்கான விருதை டேனியல் கலுயா, ஜூடாஸ் அன்ட் தி பிளாக் மெஸ்ஸியா பெற்றுள்ளார். சிறந்த துணை நடிகைக்கான விருதை ஜோடி ஃபாஸ்டர், தி மவுரிடானியன் படத்திற்காக வென்றுள்ளார். இதேபோல் சிறந்த இயக்குநருக்கான விருதை சலோ ஜாவோ நோமட்லேன்ட் படத்திற்காக பெற்றுள்ளார்.

Recommended Video

Golden globes 2020 | Priyanka Chopra Nick Jones | Lip Lock in Red Carpet
மினாரி படம்

மினாரி படம்

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதை மினாரி படம் பெற்றுள்ளது. இந்தப் படம் அமெரிக்காவை சேர்ந்தது. சிறந்த அனிமேஷன் ஃபீட்சருக்கான கோல்டன் குளோப் விருதை சோல் படம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X