twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோல்டன் குளோப் விருதுகள் 2023: வரலாற்று வெற்றி.. ஆர்ஆர்ஆர் நாட்டு கூத்து பாட்டுக்கு விருது!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது

    இயக்குனர் ராஜமௌலி நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 போன்ற தரமான படங்களை இயக்கி வருகிறார். இந்த படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன அளவிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றன.

    இவர் இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 1800 கோடி அளவுக்கு வசூலித்தது. இந்திய அளவில் அமீர் கானின் தங்கல் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக பாகுபலி 2 திரைப்படம் வசூலில் 2ம் இடம் வகிக்கிறது.

    இயக்குநர் ராஜமெளலிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்... ஆர்ஆர்ஆர் படம் பெற்றுக் கொடுத்த சிறப்பு! இயக்குநர் ராஜமெளலிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்... ஆர்ஆர்ஆர் படம் பெற்றுக் கொடுத்த சிறப்பு!

    இயக்குநர் ராஜமௌலி

    இயக்குநர் ராஜமௌலி

    பாகுபலி என்ற மகத்தான வெற்றிப்படத்தை கொடுத்த ராஜமௌலி, ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இப்படத்தில் ராம் சரண்,ஜூனியர் என்டிஆர், அஜய் தேவன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ்,தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படம் வசூலை வாரிக்குவித்தது.

    நண்பர்கள் பற்றிய கதை

    நண்பர்கள் பற்றிய கதை

    சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு நண்பர்களைப் பற்றிய கதை தான் ஆர்.ஆர்.ஆர். இதில், அல்லுரி சீதாராம ராஜு என்ற ரோலில் ராம்சரணும், கொமாரம் பீம் என்ற வேடத்தில் ஜூனியர் என்டிஆரும் நடித்திருந்தார்கள். இருவருமே சிறந்த நடிகர்களாக இருந்த போதும், ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவுக்கு இருவரின் நடிப்பும் உச்சுகொட்டவைத்தது.

    கோல்டன் குளோப் விருது

    கோல்டன் குளோப் விருது

    இத்திரைப்படம் குளோப் விருது நாமினேஷனில் ஆங்கிலம் மொழி இல்லாத படப்பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வான நிலையில், தற்போது நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த கோலாகல விழாவில், ஆர்.ஆர்.ஆர் நட்சத்திரங்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விருதை பெற்றார்

    ஆர்.ஆர்.ஆர். படம் கோல்டன் கோபல் விருதை வென்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரைத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக கோல்டன் குளோப் விருது விளங்குகிறது. இந்த விருதை இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி பெற்றுக்கொண்டார்.

    English summary
    Golden Globe Awards 2023 :SS Rajamouli's RRR Win Naatu Naatu Is Best Original Song
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X