Don't Miss!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்போதும் தவறான முடிவெடுத்துத்துட்டு உட்கார்ந்து அழுவாங்களாம்... உங்க ராசி என்ன?
- Sports
செஸ்- பிரக்ஞானந்தாவை பாராட்டிய உலகின் 2ஆம் நிலை வீரர்.. இறுதிப் போட்டியில் தோற்றாலும் சாதனை
- News
கம்பி எண்ணும் கணவன்! சிறைக்கு விசிட் அடித்தபோது சிக்கிய முகிலா! பெற்ற பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்..!
- Technology
டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..
- Finance
சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்பாசிடர் 2.0.. மீண்டும் உற்பத்தி.. எங்கு தெரியுமா?
- Automobiles
குட்டி குட்டி தெருவா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்.. புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
3 கோல்டன் குளோப் விருதுகளை வென்ற தி ரெவனனென்ட்... சில்வஸ்டர் ஸ்டலோனுக்கும் விருது!
லாஸ் ஏஞ்சல்ஸ் (யுஎஸ்): சர்வதேச சினிமாவின் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
லியோனார்டோ டிகேப்ரியோ நடிப்பில் அலெஜான்ட்ரோ கான்ஸாலெஸ் இனரிட்டு இயக்கத்தில் வெளியான தி ரெவனன்ட் படம் 3 கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளது.

தி ரெவனன்ட்
சிறந்த படம், சிறந்த இயக்கம் (அலெஜான்ட்ரோ கான்ஸாலெஸ் இனரிட்டு), சிறந்த நடிப்பு (லியோனார்டோ டிகேப்ரியோ) என மூன்று பிரிவுகளில் விருதினை வென்றது இந்தப் படம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த சம்பவமாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடுக்காட்டில் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன் லியோனார்டோ டிகேப்ரியோ முரட்டுக் கரடியால் தாக்கப்பட்டு, குற்றுயிராக கிடந்து தப்பிப்பதுதான் கதை.

சிறந்த நாயகி
தாய்க்கும் மகளுக்குமிடையிலான மென்மையான பந்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "ரூம்" (Room) படத்தில் தாய்மையின் உள்ளுணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்திய பிரையி லார்சன் (Brie Larson) சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார்.

சில்வஸ்டர் ஸ்டெலோன்
'கிரீட்' (Creed) என்ற படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த துணைநடிகர் விருது சில்வஸ்டர் ஸ்டெலோனுக்கும், 'ஸ்டீவ் ஜாப்ஸ்' (Steve Jobs) படத்தில் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ‘டைட்டானிக்' நாயகி கேட் வின்ஸ்லெட்டுக்கு சிறந்த துணைநடிகை விருதும் வழங்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி
நாடகம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான சிறந்த நடிகையாக தாராஜி பி. ஹென்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த காமெடி
தி மார்ஷியன் படத்தில் நடித்த மாட் டமான் (Matt Damon) சிறந்த காமெடி நடிகருக்கான விருதினைப் பெற்றார்.

சிறந்த திரைக்கதை
சிறந்த திரைக்கதைக்கான விருது ஸ்டீவ் ஜாப்ஸ் படத்துக்காக ஆரோன் சோர்கினுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த இசை
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது தி ஹேட்புல் ஹைட் படத்துக்காக என்னியோ மொர்ரிகோனுக்கு (Ennio Morricone) கிடைத்துள்ளது.