ஷாரூக்கானுக்கு பாலிவுட்டின் மோசமான நடிகர் விருது!

By Shankar

Shahrukh Khan
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாரூக்கானுக்கு, மோசமான நடிகர் விருது வழங்கி கிண்டலடித்துள்ளனர்.

ஹாலிவுட் பட உலகில் நடிகர், நடிகைகளை கவுரவிக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்படுவதைப் போலவே, மோசமான நடிகர் விருதும் வழங்கப்படுவது வழக்கம். வசூலில் பெரும் சாதனைப் படைத்த படம் கூட இதற்குத் தப்புவதில்லை. அதேபோல பாலிவுட் படவுலகிலும் கோல்டன் கேலா என்ற 'கிண்டல் விருது' வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது, மும்பையில் சனிக்கிழமை இரவு நடந்தது.

அந்த வகையில் பாலிவுட் நடிகர்களில் மிக மோசமான நடிகருக்கான விருது நடிகர் ஷாருக்கானுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 'மை நேம் இஸ் கான்" என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

மோசமான படத்துக்கான விருதும் இதே படத்துக்கு கிடைத்துள்ளது.

இந்தப் படம் பெரிய அளவில் வசூலைக் குவித்ததோடு, ஷாரூக்கானுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது நினைவிருக்கலாம்.

பாலிவுட்டின் மிக மோசமான நடிகைக்கான விருது 'ஆயிஷா' படத்தில் நடித்த சோனம் கபூருக்கும், மோசமான இயக்குநருக்கான விருது 'குஜாரிஷ்' படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலிக்கும் கிடைத்தது.

மோசமான துணை நடிகருக்கான விருதை அர்ஜூன் ராம்பாலும், மோசமான துணை நடிகைக்கான விருதை கங்கனா ரனவத்தும் பெற்றனர். இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு 'இனி நீங்கள் படம் இயக்கியது போதும்' என்ற விருது கிடைத்தது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X