Grammy Nominations 2025: 4வது கிராமி விருதை வெல்வாரா ரிக்கி கேஜ்.. எமோஷ்னலில் சொன்னது என்ன தெரியுமா?
டெல்லி: கிராமி விருதுகள் என்பது இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது ஆகும். ஆண்டு தோறும் இந்த விருதினைப் பெற உலகம் முழுவதும் உள்ள இசைக் கலைஞர்கள் முயற்சி செய்து கொண்டு உள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், அனோஷ்கா சங்கர், வாரிஜா ஸ்ரீ வேணுகோபால், ராதிகா வெகாரியா மற்றும் சந்திரிகா டான்டன் ஆகியோர் நாமினேட் அதாவது விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஏற்கனவே கூறியதைப்போல், கிரேமி விருதுகள் இசைத்துறையில் சிறந்து விளங்கும் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும். இந்த விருதினை அமெரிக்காவில் உள்ள National Academy of Recording Arts & Sciences அல்லது Latin Academy of Recording Arts & Sciences என அழைக்கப்படும், அகாடமி வழங்கி கௌரவிக்கின்றது. கிரேமி விருதுகள் 1959ம் ஆண்டு முதல் முதலாக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இந்த முதல் நிகழ்ச்சியில் மொத்தம் 28 விருதுகளே வழங்கப்பட்டன. அதன் பின்னர் இசைத்துறையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் உருவானதால் 28 ஆக இருந்த விருது எண்ணிக்கையை, 109 விருதுகளாக உயர்த்தி வழங்கப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்த விருதுகளின் எண்ணிக்கை 78 ஆக குறைக்கப்பட்டு வழங்கப்படு வருகின்றது.

இசைத் துறையில் சினிமா இசை மட்டும் இல்லாமல், தனியிசைக் கலைஞர்களும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர். வெளிநாடுகளில் தொடக்கத்தில் அவ்வாறு அதிகம் இருந்தனர். தற்போது இந்தியாவிலும் தனியிசைக் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகின்றது. குறிப்பாக கிராமி விருதினைப் பொறுத்தவரையில், பாப் இசை, ராக், ராப், கிளாசிக்கல், கோஸ்பல், ஜாஸ் போன்ற 25 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
ஐந்து பேர்: அந்த வகையில் அடுத்த ஆண்டு வழங்கப்படவுள்ள கிரேமி விருதுகளுக்கு இந்தியாவில் இருந்து மொத்தம் ஐந்து இசைக் கலைஞர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதாவது, ரிக்கி கேஜ், அனோஷ்கா சங்கர், வாரிஜா ஸ்ரீ வேணுகோபால், ராதிகா வெகாரியா மற்றும் சந்திரிகா டான்டன் என மொத்தம் ஐந்து பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் ரிக்கி கேஜ் இதற்கு முன்னர் மூன்று முறை கிரேமி விருதுகளை வென்றுள்ளார். அந்த வகையில் அவர் இந்த முறையும் கிரேமி விருதினை வென்றால், இவரது கிரேமி விருதின் எண்ணிக்கை நான்காக உயரும்.

லாஸ் ஏஞ்சல்ஸ்: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் தேதியில் இந்த கிரேமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள, Crypto.com அரங்கத்தில் வெகுவிமர்சையாக நடைபெறும். இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட ஐந்து இசைக் கலைஞர்களில் ரிக்கி கேஜ் மீண்டும் கிரேமி விருதினை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

நான்காவது விருது: இவர் இதற்கு முன்னர், கடந்த 2015அம் ஆண்டில் விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா என்ற தனது தனி ஆல்பத்திற்காக தனது முதல் விருதினை வென்றார். அதன் பின்னர் கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கிரேமி விருதினை வென்றார். அந்த வகையில் அடுத்த ஆண்டு ரிக்கி கேஜ் விருதினை வென்றால் அது அவரது நான்காவது விருதாக மாறும். இதுமட்டும் இல்லாமல், இந்த ஆண்டு அவரை விருதுக்கு அருகில் அழைத்துச் சென்றுள்ள பிரேக் ஆஃப் டான் ஆல்பம் குறித்தும் அதில் உள்ள 9 பாடல்கள் குறித்தும் மிகவும் எமோஷ்னலாக பேசியுள்ளார். அதாவது இது தொடர்பாக அவர் கூறுகையில், " இசை மூலம் அமைதியான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். மனநலம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்த பிரேக் ஆஃப் டான் ஆல்பம் உருவாக்கப்பட்டது" எனக் கூறியுள்ளார். இது பலரது கவனத்தின ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











