twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தி ஷேப் ஆப் வாட்டர் படம் இயக்கிய கல்லர் டெல் டோரோவுக்கு சிறந்த இயக்குநர் விருது!

    By Shankar
    |

    Recommended Video

    90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா!- வீடியோ

    லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது தி ஷேப் ஆப் வாட்டர் படம் இயக்கிய கல்லர் டெல் டோரோவுக்கு (Guillermo Del Toro) கிடைத்துள்ளது.

    2018-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வண்ணமயமான மேடையில் நடந்து வருகிறது.

    Guillermo Del Toro wins best direction award

    இந்த முறை தி ஷேப் ஆப் வாட்டர் படம் 13 பிரிவுகளில் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

    அவற்றில் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் ஆகிய பிரிவுகளில் இரு விருதுகளை அந்தப் படம் வென்றது. இப்போது மூன்றாவதாக சிறந்த இயக்குநருக்கான விருது அந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது. படத்தை இயக்கிய கல்லர் டெல் டோரோவுக்கு (Guillermo Del Toro) இந்த விருதினை ஜேன் பன்டா மற்றும் மிலன் மிர்ரேன் ஆகியோர் வழங்கினர்.

    இந்தப் பிரிவில் கிறிஸ்டோபர் நோலன் (டன்கிர்க்), ஜோர்டன் பீலே (கெட் அவுட்), கிரேடா ஜெர்விக் (லேடி பர்ட்), பால் தாமஸ் ஆன்டர்ஸன் (பாந்தம் த்ரெட்) ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

    சிறந்த படம், நடிகர், நடிகை ஆகிய பிரிவுகளிலும் தி ஷேப் ஆப் வாட்டர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    English summary
    Guillermo Del Toro, the maker of The Shape of Water has won the Oscar for the Best Direction.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X