twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குஜராத்தி படமான ‘தி குட் ரோட்’ இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை

    |

    டெல்லி: தன்னுடன் போட்டியிட்ட 21 மற்ற மொழிப்படங்களை தோற்கடித்து, 'தி குட் ரோட்' என்ற குஜராத்திப்படம் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    விருதுகளில் உயர்வானதாக பெரும்பாலான களைஞர்களால் எண்ணப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. அந்த விழாவில் சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்திற்கான பிரிவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்படங்கள் அனுப்பப் படுவது வழக்கம்.

    அந்தவகையில் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருத்துக்காக குஜராத்திப் படமான 'தி குட் ரோட்' என்ற படம் தேர்வாகியுள்ளது.

    22 படங்கள் போட்டி...

    22 படங்கள் போட்டி...

    ஆஸ்கார் பரிந்துரைக்கு தி லஞ்ச் பாக்ஸ், பாக் மில்கா பாக், இங்கிலிஷ் விங்கிலிஷ், மலையாள படமான செல்லுலாய்டு, கமல்ஹாசனின் விஸ்வரூபம், குஜராத்தி படமான தி குட் ரோட் உள்ளிட்ட 22 படங்கள் போட்டியில் இருந்தன.

    தி குட் ரோட்....

    தி குட் ரோட்....

    இப்படங்களில் இருந்து ஒருபடத்தை தேர்வு செய்து, இந்தியா சார்பில் பரிந்துரை செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. 19 பேர் கொண்ட தேர்வுக்குழு, 5 மணி நேர ஆலோசனை செய்து ‘தி குட் ரோட்' என்ற குஜராத்திப் படத்தை தேர்வு செய்தது.

    தேசியவிருது பெற்ற படம்...

    தேசியவிருது பெற்ற படம்...

    கியான் கோராவின் இயக்கத்தில் உருவான இப்படம் ஏற்கனவே சிறந்த குஜராத்தி படத்துக்கான தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

    கதைக்கரு....

    கதைக்கரு....

    இப்படத்தின் கதைக்கரு, விடுமுறைக்கு கட்ச் பகுதிக்கு பெற்றோருடன் சுற்றுலா சென்ற சிறுவன் பாலைவனத்தில் காணாமல் போவது, அவனைத் தேடி அலையும் பெற்றோரையும் சுற்றியும் பின்னப்பட்டுள்ளது.

    கோரியா இயக்கம்....

    கோரியா இயக்கம்....

    தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் தயாரித்துள்ள இப்படத்தை 42 வயது கோரியா இயக்கியுள்ளார். இப்படம் இவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகர்-நடிகைகள்.....

    நடிகர்-நடிகைகள்.....

    பாலைவனத்தில் தொலைந்து போகும் 7 வயது சிறுவன் ஆதித்யாவாக கேவல் கட்ரோடியா நடித்துள்ளார். அவரது பெற்றோராக அஜய் கேகி-சோனாலி குல்கர்னி நடித்துள்ளனர்.

    வாழ்த்துக்கள்....

    வாழ்த்துக்கள்....

    தி குட் ரோட் படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்ய தேர்வாகியுள்ளதைக் கேள்விப்பட்டு, ‘தான் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும்' குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

    லஞ்ச் பாக்ஸ் சவால்....

    லஞ்ச் பாக்ஸ் சவால்....

    தன்னுடைய படத்திற்கு ‘தி லஞ்ச் பாக்ஸ்' என்ற படம் தான் கடுமையாக போட்டியாக இருக்கும் என எண்ணியதாகத் தெரிவித்துள்ளார் தி குட் ரோட் படத்தின் இயக்குநர் கோரியா.

    English summary
    Debut feature filmmaker Gyan Correa's Gujarati film "The Good Road" has been chosen to represent India in the best foreign film category at the Academy Awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X