ஆஸ்கருக்கு சென்ற ஹரிஷ் கல்யாண் படம்.. ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தேடி போகும் என ஹீரோ ஹேப்பி!

சென்னை: உலகின் தலை சிறந்த படங்களின் கதைகள் ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பெறுவது வழக்கம். அப்படியொரு கெளரவம் ஹரிஷ் கல்யாண் நடித்த படத்துக்கு கிடைத்திருக்கிறது. அதன் அறிவிப்பை வெளியிட்டு தனது சந்தோஷத்தை ஹரிஷ் கல்யாண் ஷேர் செய்துள்ளார்.

ஸ்டார் படத்தை ஹரிஷ் கல்யாண் மிஸ் செய்து விட்டார் என ஏகப்பட்ட ட்ரோல்கள் அவருக்கு எதிராக கிளம்பின. ஆனால், படம் வெளியான பின்னர் இந்த படத்தை மிஸ் செய்ததே நல்ல செயல் என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலர் ஹரிஷ் கல்யாணின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Harish Kalyan s Parking movie received Oscar s honour


தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்த எல்ஜிஎம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் வெளியான பார்க்கிங் திரைப்படம் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல படமாக அமைந்தது.

அமலாபால் படத்தில் அறிமுகம்: அமலாபால் அறிமுகமான சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்பதற்கு முன்னதாக பல படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். ஐந்து ஐந்து, சட்டப்படி குற்றம், சந்தா மாமா, பொறியாளன், வில் அம்பு போன்ற படங்களில் நடித்தும் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைத்த ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். நடிகை ரைசா வில்சனுடன் நெருக்கமாக பழகி வந்த அவர், அந்த சீசன் முடிந்ததும் இளன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் வெற்றி பெற்றார்.

தாராள பிரபு: இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, கசடதபற, ஓ மணப்பெண்ணே, எல்ஜிஎம் மற்றும் பார்க்கிங் உள்ளிட்ட பல படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். தாராபுரம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறுகிறது கடந்த ஆண்டு வெளியான பார்க்கின் திரைப்படமும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளியது.

பார்க்கிங்: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி வெளியான பார்க்கிங் திரைப்படம் ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 17 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது. பார்க்கிங் திரைப்படம் குறைந்தபட்சம் 50 கோடி ரூபாயாவது வசூல் செய்திருக்க வேண்டிய படம் என்றும் புயல் மழை காரணமாக அந்தப் படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது என்கின்றனர்.

ஆஸ்கர் லைப்ரரியில் பார்க்கிங்: வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் படத்தைப் பார்த்த விமர்சகர்கள் அனைவரும் படத்தைப் பாராட்டினர். ஓடிடியில் வெளியான பின்னர் ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த படத்தைப் பார்த்து தியேட்டரில் இந்த படத்தை பார்க்க தவறி விட்டோமே என ஃபீல் செய்தனர். இந்நிலையில், ஆஸ்கர் லைப்ரரியில் பார்க்கிங் படத்துக்கான அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. அது தொடர்பான ட்வீட்டை வெளியிட்டு ஹரிஷ் கல்யாண் ஹேப்பி ஆகியுள்ளார்.

கைவசம் பல படங்கள்: ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஹேண்ட்ஸம் பாயாக இருந்தாலும் நெகட்டிவ் ஷேட் கதாபாத்திரங்களில் தூள் கிளப்பி வருகிறார். நூறு கோடி வானவில், டீசல் மற்றும் லப்பர் பந்து உள்ளிட்ட படங்களில் படித்து முடித்துள்ள ஹரிஷ் கல்யாண் அந்த படங்களின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X