பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது... கேரள அரசு அறிவிப்பு!
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா அரிவராசனம் விருது பெறுகிறார்.
சென்னை: கேரள அரசு சார்பில் பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலாவிற்கு அரிவராசனம்
விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மாலை மகரவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதற்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. அப்போது ஒவ்வொரு ஆண்டும் அய்யப்பன் பற்றிய சிறப்புகளைப் பரப்பும் கலைஞர்களைக் கவுரவப்படுத்தும் வகையில் அரிவராசனம் விருது வழங்கி வருகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான அரிவராசனம் விருது பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்படுகிறது. வருகிற 17-ந் தேதி சபரிமலை சன்னிதானத்தில் உள்ள கலையரங்கில் நடைபெறும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
இந்த தகவலை கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கங்கை அமரன் போன்றோரும் அரிவராசனம் விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











