கேரள அரசின் உயரிய விருது ஹரிவராசனம்… இசைஞானிக்கு வழங்க முடிவு!
சென்னை : கேரள அரசின் உயரிய விருதான ஹரிவராசனம் விருது இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்படுகிறது.
இசையின் ஞானி, இசைஞானி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இளையராஜா. இன்றும் என்றும் உலகமே கொண்டாடும் இசையின் நாயகன், கவலைகளை மறந்து மனங்களை துயில் கொள்ள செய்யும் காந்தக்குரலின் சொந்தக்காரர் என்று இவரின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம். இவர் செய்த சாதனைகளும் இவருக்கு கிடைத்த விருதுகளும் பல.
1975 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இந்தி திரையுலக பாடல்கள் அதிகம் ஒலித்தன. இதனை மாற்றி தமிழகத்தில் தமிழ் பாடல்களை கேட்க செய்தவர் இவர் தான். ஒரு இசை உலகில் எவரும் செய்ய முடியாத சாதனையை இவர் படைத்தார். சுமார் 1000 படங்களுக்கு இசை அமைத்து சாதனை படைத்துள்ளார் இசைஞானி. தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம், ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் இவர் சிறந்த இசைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். மேலும் சிறந்த பின்னணி இசைக்கான விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை 2010 ஆம் ஆண்டு பெற்றார் மற்றும் பத்ம விபூஷன் விருதை கடந்த 2018 ஆம்ஆண்டு பெற்றார். வாழ்நாள் சாதனையாளர் விருதை இளையராஜா 2015 ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் பிலிம் பேஸ்டிவல் இந்தியாவில் நடைபெற்றது அதில் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் கேரளா மாநிலத்தின் விருதை மூன்று முறை பெற்றுள்ளார் மற்றும் ஆந்திரா மாநிலத்தின் உயரிய விருதான நந்தி விருதையும் பெற்றுள்ளார் இளையராஜா.
விருதுகள் மற்றும் பாராட்டுக்கள் இவருக்கு புதிதல்ல என்றாலும் தற்போது கேரளா அரசின் உயரிய விருதான ஹரிவராசனம் விருது வழங்க உள்ளது. வருகிற ஜனவரி மாதம் இந்த விருது வழங்கபடுவதாக அறிவித்துள்ளது.

இசைஞானி அமைத்த மெட்டு மற்றும் அவர் அமைத்த பாடல்கள் அனைத்தும் காலங்கள் தாண்டியும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பல இரவுகளை இனிமையாக்கி தாலாட்டி உறங்க வைத்த பெருமை இவரது இசைக்கு உண்டு. இன்னும் இவருக்கு பல விருதுகள் இவரை வந்து சேரும். இவ்வையகம் உள்ள வரை ராஜாவின் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்.

சபரிமலை கோவில் நடை அடைக்கும் போது ஹரிவராசனம் பாடல் பாடப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி மிகவும் பிரசித்திப் பெற்ற நிகழ்ச்சியாக நடத்தப்படும். அதை சிறப்பிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது இதுவரை யேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கங்கை அமரன், சித்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











