Grammy Awards - 66ஆவது கிராமி விருதுகள்.. போட்டியில் இருக்கும் பிரதமர் மோடியின் பாடல் .. விவரம் உள்ளே

நியூயார்க்: Grammy Awards (கிராமி விருதுகள்) 66ஆவது கிராமி விருதுகளில் யார் யார் போட்டியில் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரம் தெரியவந்திருக்கிறது.

உலகம் முழுவதும் இருக்கும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் வழங்கப்படும் கிராமி விருதுக்கு இசை கலைஞர்கள் மத்தியில் பெரும் மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான 66ஆவது கிராமி விருதுகள் இன்னும் 85 நாட்களில் நடைபெறவிருக்கிறது . அதற்கான அறிவிப்பை விருது குழுவும் வெளியிட்டிருக்கிறது.

Here is the Details about 66th Grammy Awards Nominees List

நாமினேஷன்: இந்த சூழலில் கிராமி விருதில் நாமினேஷன் ஆனவர்கள் குறித்த விவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி சிறந்த ஆல்பம் என்ற பிரிவில் டெய்லர் ஷிஃப்ட்டின் மிட் நைட்ஸ், ஒலிவியா ராட்ரிகோவின் கட்ஸ், ஜான் பாட்டிஸ்டியின் World Music Radio என மொத்தம் 8 ஆல்பங்கள் நாமினேஷனில் இருக்கின்றன.

சிறந்த பாடல் பிரிவு: அதேபோல் சிறந்த பாடலுக்கான பிரிவில் SZAவின் கில் பில், ஜான் பாட்டிச்ஸி மற்று டான் வில்சனின் பட்டர்ஃப்ளை, ஜேக் ஆண்ட்னோனாஃப் மற்றும் டெய்லர் ஷிஃப்ட்டின் ஆண்ட்டி ஹீரோ உள்ளிட்ட 8 பாடல்கள் நாமினேஷனில் இருக்கின்றன. இவற்றில் எந்தப் பாடலுக்கு கிராமி விருதுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்திருக்கிறது.

மோடியின் பாடல்: இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியின் அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ் என்ற பாடலும் கிராமி விருதுக்கு நாமினேட் ஆகியிருக்கிறது. இந்தப் பாடலை இந்திய - அமெரிக்க பாடகர் ஃபால்குனி ஷா, பிரதமர் மோடியுடன் இணைந்து சிறு தானியங்களை மேம்படுத்துவதற்காக இயற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலானது சிறந்த உலகளாவிய இசை செயல்திறன் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

விருது வென்ற இந்தியர்கள்: முன்னதாக இந்தியாவிலிருந்து ஸுபைன் மேத்தா, ரவிஷங்கர் தலா ஐந்து விருதுகளையும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு விருதுகளையும், ஜாகீர் ஹுசைன் இரண்டு விருதுகளையும் ரிக்கி கேஜ் இரண்டு விருதுகளையும், ஃபாலு ஒரு விருதையும், நீலா வாஸ்வானி ஒரு விருதையும், விஸ்வ மோகன் பட் ஒரு கிராமி விருதையும் வென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே 2022ஆம் ஆண்டுக்கான லத்தீன் கிராமி விருதுகள் வழங்கும் விழா சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் உலக அளவில் பிரபல பாடகியான ஷகீராவுக்கு மூன்று விருதுகள் கிடைத்தன என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X