விருதுகள்

By Staff

டெல்லி:

ஹேராம், சேது படங்களுக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும் தேசிய விருதுகளை ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் திங்கள்கிழமை வழங்கினார்.

இந்தியாவின் மிக உயர்ந்த சினிமாத்துறைக்கான விருதான தாதசாகேப் பால்கே விருதை ரிஷிகேஷ் முகர்ஜி பெற்றார்.சினிமாத்துறைக்கு அவர் ஆற்றிய உயர்ந்த சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

ஹேராம் படத்துக்கு 3 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த உடைகளை வடிவமைத்ததற்காக சரிகா கமல்ஹாசனுக்கு விருதுகிடைத்தது. இதில் மராத்திய கவிஞராக நடித்த அதுல் குல்கர்னிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது. படத்தில்சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்களை வழங்கிய மந்த்ரா நிறுவனமும் விருதைப் பெற்றது.

சிறந்த மாநில மொழிப் படமாக சேது தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. விருதை படத்தின் தயாரிப்பாளர் கந்தசாமிபெற்றுக் கொண்டார்.

சங்கமம் படத்தில் முதல்முறையாகக் கிள்ளிப் பார்த்தேன்...பாடலை எழுதிய வைரமுத்துவும் விருது பெற்றார்.

தேசிய அளவில் சிறந்த படமாக வனப்பிரஸ்தம் என்ற மலையாள படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் நடித்த மோகன்லாலுக்குசிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருது கிரேன் கர்ருக்கு வழங்கபபட்டது. பாரிவாலி என்ற இந்திப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவ் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குனராக புத்ததேவ் தாஸ் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X