'ஜோக்கரு'க்கு சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருது... பெண் இசைக்கலைஞர் ஹில்துர் பெற்றார்
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருது ஜோக்கர் படத்துக்கு கிடைத்துள்ளது.
92 வது ஆஸ்கர் விருது விழா இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் சினிமாவின் உயரிய விருது விழாவான இதில், கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

விழா நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கம் திரை நட்சத்திரங்களால் நிரம்பி வழிகிறது. இந்த விழா கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறுகிறது.
இதில் சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருது, ஜோக்கர் படத்துக்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு இசை அமைத்த, ஹில்ட்துர் கோனாடோட்டிருக்கு (Hildur Guðnadóttir) என்ற பெண் இசை அமைப்பாளர் இந்த விருதை பெற்றார்.
Comments


Click it and Unblock the Notifications