twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கார் கலாச்சாரத்தை மாற்றிய கொரோனா...என்னென்ன விஷயங்கள் மாறின ?

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ் : வழக்கமாக பிப்ரவரி 28 ம் தேதி நடத்தப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 25 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முந்தைய ஆஸ்கார் விழாக்களை போல் அல்லாமல் பல விஷயங்களில் மாறுபட்டதாக, வித்தியாசமானதாக இந்த ஆண்டு ஆஸ்கார் விழா நடைபெற்றது.

    இந்த ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா, கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    ஆஸ்கர் 2021: மறைந்த நடிகர் இர்ஃபான் கானுக்கு கவுரவம்.. கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்திற்கு விருது! ஆஸ்கர் 2021: மறைந்த நடிகர் இர்ஃபான் கானுக்கு கவுரவம்.. கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்திற்கு விருது!

    கொரோனா காரணமாக பல விருது வழங்கும் விழாக்கள் இணைய வழியாக நடத்தப்பட்டு வருகின்றன. அதே போல் ஆஸ்கார் விழாவையும் நடத்தலாமா என முதலில் ஆலோசிக்கப்பட்டது. மேடை நிகழ்ச்சியாக நடத்த கடைசி நிமிடத்திலேயே முடிவெடுக்கப்பட்டது.

    கவனிக்கப்பட்ட அம்சங்கள்

    கவனிக்கப்பட்ட அம்சங்கள்

    அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் மாஸ்க், முக்கியமான விஷயமாக அமைந்தது. அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றியே விழாவில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தொகுப்பாளர் இன்றி விழா நடத்தப்பட்டது.

    கலாச்சாரத்தை மாற்றிய கொரோனா

    கலாச்சாரத்தை மாற்றிய கொரோனா

    வழக்கமாக ஆஸ்கார் விழா என்றாலே நடிகைகள் கண்ணை கவரும் விதத்தில் வித்தியாசமாகவும் கவர்ச்சிகரமாகவும் ஆடை அணிவது தான் வழக்கம். ஆனால் அந்த கலாச்சாரத்தை கொரோனா மாற்றி உள்ளது. இந்த ஆண்டு அனைவரும் வழக்கமான, சாதாரண உடைகளையே அணிந்து வர வேண்டும். குறிப்பாக வியர்வை வெளியேறும் விதமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது என விழா நடத்துவோர் கண்டிப்பாக கூறி விட்டனர்.

     நோ சொல்லப்பட்ட விஷயங்கள்

    நோ சொல்லப்பட்ட விஷயங்கள்

    ஆஸ்கார் விழாவில் நேரில் கலந்து கொள்ள முடியாத பலர், ஜும் செயலி வழியாக பங்கேற்று, உரையாற்றுவது வழக்கம். ஆனால் இந்த முறை அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. விழாவில் பங்கேற்க விரும்புவோம் நேரில் மட்டுமே பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையும் 200 ஆக குறைக்கப்பட்டது.

     தியேட்டர் படமாக இருக்க அவசியமில்லை

    தியேட்டர் படமாக இருக்க அவசியமில்லை

    விருது வழங்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டதால் படங்களின் பரிந்துரைகள் டிசம்பர் 31 ம் தேதிக்கு பதில் இந்த ஆண்டு பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கு முன் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதின் பரிந்துரைக்கு அனுமதிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு, பரிந்துரைக்கப்படும் படங்கள் தியேட்டரில் ஓடியிருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டது.

    ஒன்றாக்கப்பட்ட விருதுகள்

    ஒன்றாக்கப்பட்ட விருதுகள்

    வழக்கமாக சவுண்ட் மிக்சிங், சவுண்ட் எடிட்டிங் என இரு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டிற்கும் பலருக்கும் வித்தியாசம் புரிந்து கொள்ள முடிவதில்லை என்பதால் சவுண்ட் எஃபெக்ட்ஸ் என ஒரே விருதாக வழங்கப்பட்டது.

    மாறிய விருது வரிசை

    மாறிய விருது வரிசை

    வழக்கமாக ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த படம் எது என கடைசியாக தான் அறிவிக்கப்பட்டு, விழா நிறைவு செய்யப்படும். ஆனால் இந்த முறை சிறந்த நடிகருக்கான விருது தான் கடைசியாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் விழா நிறைவு செய்யப்படுவதாக ஜாக்குலின் போனிஸ் அறிவித்தார்.

    English summary
    How the 2021 Oscars is Different from Previous Academy Awards Ceremonies
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X