IIFA Awards 2025: IIFA விருதுகளில் கலக்கிய பாலிவுட் பிரபலங்கள்.. விருதுகளை அள்ளியது எந்த படம்?
ஜெய்ப்பூர்:பாலிவுட் சினிமா விருதுகளில் மிகவும் முக்கியமான விருதாக பார்க்கப்படும் விருதுகளில் IIFA விருதுகளுக்கு எப்போதுமே தனி மதிப்பும் எதிர்பார்ப்பும் உள்ளது. நடிகர்கள் இந்த விருதை வெல்ல எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்களோ, அதே அளவிற்கு, அவர்களது ரசிகர்களும் இந்த விருதுகள் மீது கவனமும் அக்கறையும் செலுத்துவது பாலிவுட் வட்டாரத்தில் வாடிக்கையாக மாறிவிட்டது. இந்நிலையில் எந்தெந்த படங்கள் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை வென்றது, எந்தெந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் விருதுகளை வென்றார்கள் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
சினிமா மற்றும் வெப் சீரிஸ் என இரண்டு பிரிவுகளாகவும் அது இல்லாமல் இசை மற்றும் ஆவண படங்களுக்கு விருதுகள் என பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் நேற்று அதாவது மார்ச் 8ஆம் தேதி நடைபெற்ற இந்த விருது விழாவில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அந்த வகையில் சினிமாவில் எடுத்துக் கொண்டால்,

அந்த வகையில் சினிமாவில் எடுத்துக் கொண்டால்,
சிறந்த படம் - அமர் சிங் சம்கிலா
சிறந்த நடிகை - தோ பட்டி படத்திற்காக க்ரிதி சனோன்
சிறந்த நடிகர் - அமர் சிங் சம்கிலா படத்திற்காக விக்ராந்த் மாஸ்ஸி
சிறந்த இயக்குநர் - அமர் சிங் சம்கிலா படத்திற்காக இம்தியாஸ் அலி
சிறந்த துணை நடிகை - பெர்லின் படத்தில் நடித்த அனுப்ரியா கோயங்கா
சிறந்த துணை நடிகர் - செக்டார் 36 படத்திற்காக தீபக் டோப்ரியல்
சிறந்த திரைக்கதை - தோ பட்டி படத்தின் திரைக்கதைக்காக கனிகா தில்லான் வென்றார்.
வெப் சீரீஸ் வகை..
சிறந்த வெப் சீரிஸ் : பஞ்சாயத்து சீசன் 3
சிறந்த நடிப்பு பெண் : பண்டிஷ் பண்டிட்ஸ் சீசன் 2 வெப் சீரிஸ்க்காக ஸ்ரேயா சவுத்ரி
சிறந்த நடிப்பு ஆண் : பஞ்சாயத்து சீசன் 3 க்காக ஜிதேந்திர குமார்
சிறந்த இயக்கம் : பஞ்சாயத்து சீசன் 3-க்கு தீபக் குமார் மிஸ்ரா
சிறந்த துணை நடிகை : ஹீரமண்டி: தி டயமண்ட் பஜார் வெப் சீரிஸ்க்காக சஞ்சீதா ஷேக்
சிறந்த துணை நடிகர் ஆண்: பஞ்சாயத்து சீசன் 3 க்காக பைசல் மாலிக்
சிறந்த கதை மற்றும் திரைக்கதை : கோட்டா ஃபேக்டரி சீசன் 3
மற்றவகை விருதுகள்
சிறந்த ரியாலிட்டி அல்லது சிறந்த ஸ்கிரிப்ட் இல்லாத தொடர்: ஃபேபுலஸ் லைவ்ஸ் vs. பாலிவுட் வைவ்ஸ்
சிறந்த ஆவணப்படம்/ ஆவணப்படத் தொடர்: யோ யோ ஹனி சிங்: பிரபலமானது
சிறந்த டைட்டில் பாடல்: மிஸ்மேட்ச்டு சீசன் 3 இல் இடம்பெற்றுள்ள இஷ்க் ஹை பாடலுக்காக அனுராக் சைக்கியா


Click it and Unblock the Notifications











