twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜாவிற்கு ராஜா விருது வழங்கி கவுரவப்படுத்தியது கேரளா அரசு

    |

    கேரளா : இசை என்றால் ராஜா ராஜா என்றால் இசை பண்ணைபுரத்தில் பிறந்து இன்று உலகமே கொண்டாடும் உன்னதமான கலைஞன் தான் இசைஞானி இளையராஜா . இவர் செய்த சாதனைகள் பல பெற்று விருதுகளும் பல.

    1975 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இந்தி திரையுலக பாடல்கள் அதிகம் ஒலித்தன. இதனை மாற்றி தமிழகத்தில் தமிழ் பாடல்களை கேட்க செய்தவர் தான் இளையராஜா. ஒரு இசை உலகில் எவரும் செய்ய முடியாத சாதனையை இவர் படைத்தார். சுமார் 1000 படங்களுக்கு இசை அமைத்து சாதனை படைத்துள்ளார் இசைஞானி. பல இந்திய மொழிகளில் இசை அமைத்துள்ளர் . தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம், இந்தி,மாராத்தி,பஞ்சாபி என அடிக்கி கேடே போகலாம் .

    ilayaraja receives the prestigious award from kerala

    இவர் சிறந்த இசைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.
    மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.
    இந்தியாவின் உயரிய விருதான
    பத்ம பூஷன் விருதை 2010 ஆம் ஆண்டு பெற்றார் மற்றும் பத்ம விபூஷன் விருதை கடந்த 2018 ஆம்ஆண்டு பெற்றார்.

    ilayaraja receives the prestigious award from kerala

    வாழ்நாள் சாதனையாளர் விருதை இளையராஜா 2015 ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் பிலிம் பேஸ்டிவல் இந்திய வில் நடைபெற்றது அதில் இவருக்கு வழங்கப்பட்டது.மற்றும் கேரளா மாநிலத்தின் விருதை மூன்று முறை பெற்றுள்ளார் மற்றும் ஆந்திரா
    மாநிலத்தின் உயரிய விருதான நந்தி விருதையும் பெற்றுள்ளார் இளையராஜா.

    ilayaraja receives the prestigious award from kerala

    விருதுகள் மற்றும் பாராட்டுக்கள் இவருக்கு புதிதல்ல.தற்போது கூட கேரளா அரசு இவருக்கு அங்கு வழங்கும் உயரிய விருதான ஹரிவராசனம்
    விருது கேடயம் வழங்கி கவுரவித்தது. விருது உடன் இவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது இதற்கு முன்பு பி.சுசீலா மற்றும் கே.ஜே. ஜேசுதாஸ் மற்றும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ilayaraja receives the prestigious award from kerala

    மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. 2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது என்பது பெருமையான விஷயம் . இதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு 'வணக்கத்துக்குரிய இசைஞானி' என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

    English summary
    harivarasanam award is given by kerala to the very efficient and talented people of the society . it selects the people who are socially connected very much and has a good rapport with common audience. and now its a prestigious moment that music genius ilayaraja from tamilnadu been selected and received this award.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X