ஆஸ்கர் 2019 விருது: இந்தியா சார்பில் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படம் பரிந்துரை

ஆஸ்கர் 2019 விருதுக்கு இந்தியா சார்பில் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

டெல்லி : இந்தியா சார்பில் 2019ம் ஆண்டு ஆஸ்கர் விருது தேர்வுக்காக நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

திரை உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் கருதப்படுகிறது. அதன்படி, 2019-ம் ஆண்டு ஆஸ்கர் பிறமொழிப் படங்கள் விருது பிரிவிற்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட வேண்டிய படத்தை தேர்வு செய்வதற்கான திரையிடல் நேற்று மும்பையில் நடைபெற்றது.

இதில், இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் போட்டியிட்டன. இந்த திரையிடலில் ராஸி, பத்மாவத் ஹிச்சி, அக்டோபர், லவ் சோனியா, குலாப்ஜாம், பிஹு, கட்வி ஹவா, போகாடா, ரேவா, அஜ்ஜி, நாட் உள்ளிட்ட 28 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

4 தேசிய விருதுகள்:

4 தேசிய விருதுகள்:

இந்த படங்களைப் பார்த்த தேசிய திரைப்படக் கூட்டமைப்பு, இதில் எதை ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவது என பரிசீலனை செய்தது. அதன் முடிவில், நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற அஸ்ஸாமி மொழி திரைப்படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை ஆஸ்கர் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இயக்குநர்:

இயக்குநர்:

வில்லேஹ் ராக்ஸ்டார்ஸ் திரைப்படத்தை ரிமா தாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைத்துமே இவர்தான். ஒரு சிறுமியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இப்படம் விருதுகளைக் குவித்து வருகிறது.

அடிப்படைக் கேள்விகள்:

அடிப்படைக் கேள்விகள்:

இந்தியாவின் கிராமங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கிறதா? அடிப்படை வசதிகள் அவர்களுக்குச் சென்று சேருகிறதா? அவர்களது வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது? என்ற கேள்விகளும், அதன் பதில்களும் தான் இப்படத்தின் கதைக்களம்.

ஆஸ்கர் கனவு:

ஆஸ்கர் கனவு:

இந்தியத் திரைப்படங்கள் எதுவும் இதுவரை ஆஸ்கர் விருதைப் பெறவில்லை. 2001-ம் ஆண்டில் ‘லகான்' திரைப்படம் முதன்முறையாக முதல் 5 இடங்களுக்குள் வந்தது. ஆனால் விருது கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படமாவது இந்தியாவின் ஆஸ்கர் கனவை நினைவாக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X