2021ம் ஆண்டின் சிறந்த திரை ஆளுமை.. 52வது இந்திய சர்வதேச விருது விழாவில் நடிகை ஹேமமாலினிக்கு விருது!

சென்னை: கோவாவில் இன்று தொடங்கி உள்ள 52வது இந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில் (IFFI) பிரபல நடிகை ஹேமமாலினிக்கு விருது கொடுத்து கெளரவித்துள்ளனர்.

திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக நடிகை ஹேமமாலினிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஹேமமாலினி என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேமமாலினி

ஹேமமாலினி

1963ம் ஆண்டு வெளியான இது சத்தியம் எனும் தமிழ் படம் மூலம் நடன கலைஞராக அறிமுகமானார் நடிகை ஹேமமாலினி. பாண்டவ வனவாசம் எனும் தெலுங்கு படத்தில் நடித்த அவர் 1968ம் ஆண்டு இந்தியில் வெளியான சப்னோ கா செளதாகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தர்மேந்திரா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுடன் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஹேராம்

ஹேராம்

2000ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ஹேராம் படத்தில் அம்புஜம் ஐயங்கார் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் இந்த படம் வெளியானது. 1963ல் தொடங்கிய இவரது திரைப்பயணம் 2020ம் ஆண்டு வெளியான சிம்லா மிர்ச்சி படம் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

திரை ஆளுமை விருது

திரை ஆளுமை விருது

75 வயதாகும் நடிகை ஹேமமாலினி இந்திய திரைத்துறையில் பல ஆண்டுகள் தனது கலை வாழ்க்கையால் ஏகப்பட்ட மக்களை மகிழ்வித்துள்ளார். இந்நிலையில், இன்று கோவாவில் தொடங்கப்பட்ட IFFI எனும் இந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில் நடிகை ஹேமமாலினிக்கு 2021ம் ஆண்டுக்கான சிறந்த திரை ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது.

களைகட்டும் விருது விழா

களைகட்டும் விருது விழா

ஆண்டுதோறும் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருவது வழக்கம். இன்று நவம்பர் 20ம் தேதி தொடங்கும் இந்த விழா வரும் 28ம் தேதி நிறைவு பெறுகிறது. சமந்தா உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட திரை கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். இந்திய திரைப்படங்கள் மற்றும் சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

பிரபலங்கள் பாராட்டு

பிரபலங்கள் பாராட்டு

ட்ரீம் கேர்ள் உள்ளிட்ட படங்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ள நடிகை ஹேமமாலினிக்கு இந்திய அரசு சார்பாக இப்படியொரு கெளரவம் வழங்கப்பட்டதை அறிந்த திரை பிரபலங்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் ஹேமமாலினியை பாராட்டி வருகின்றனர்.

சல்மான் கான் பங்கேற்பு

சல்மான் கான் பங்கேற்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக இருந்து வரும் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கோவாவில் நடைபெற்று வரும் இந்த சர்வதேச திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X