twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மும்பை சேரி பகுதி-ஆஸ்கர்: ஹாலிவுட் பிரபலங்களை அசத்திய இந்திய 'குட்டி' சிங்கம்

    By Siva
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் மும்பையில் உள்ள சேரி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சன்னி பவார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சேரி பகுதியில் ஒரேயொரு அறை உள்ள வீட்டில் வசித்து வரும் சன்னி பவார்(8) லயன் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் சன்னி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்த ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்டார்.

    கோட்சூட்

    கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்த சன்னி பவார் சிவப்பு கம்பளத்தில் நடந்தார். அவர் நம்பிக்கையுடன் நடந்து வந்த விதம் ஹாலிவுட் நட்சத்திரங்களை கவர்ந்துள்ளது.

    சன்னி

    சன்னி

    விழாவை தொகுத்து வழங்கிய ஜிம்மி கெம்மல் சன்னி இருந்த இடத்திற்கு வந்து அவரை தூக்கி அனைவருக்கும் காண்பிக்க அரங்கமே அதிர்ந்தது. அப்போது இனிப்புகள் அடங்கிய பைகள் காற்றில் பறந்து வந்தன.

    லயன் கிங்

    பிரபல ஹாலிவுட் படமான லயன் கிங்கில் சிங்க ராஜா முபாசா, ராணி சராபிக்கு சிம்பா பிறந்தவுடன் அதை ரபிக்கி காட்டு விலங்குகளுக்கு அறிமுகம் செய்து வைத்த காட்சியை தான் ஜிம்மி சன்னியை வைத்து நடித்தார்.

    உற்சாகம்

    சேரியில் பிறந்து வளர்ந்த ஒரு சிறுவனால் ஆஸ்கர் வரை சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் சன்னி பவார்.

    English summary
    8-year old Mumbai slum boy Sunny Pawar has become the centre of attraction at the 89th Oscar award function held in Los Angeles today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X