ஆஸ்கர் விருது ரேஸில் கோலிவுட், மாலிவுட் இசையமைப்பாளர்கள்
சென்னை: உயரிய விருதான ஆஸ்கருக்கு இந்த ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கேரளாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஸ்ரீவல்சன் ஜே. மேனன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்கர் விருது என்பது இந்தியர்களுக்கு எப்போதாவது கிடைக்கும் உயரிய கவுரவம் ஆக இருக்கிறது. இந்திய படங்கள், இசையமைப்பாளர்கள் என பிரபலங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் விருதைப் பெறுவதில்லை. பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் லகான் படமும் ஆஸ்கருக்கு போய் வெறுங்கையுடன் திரும்பியது. சொந்தமாக படம் எடுங்கள் ஆங்கிலேயர்களின் கதையை சுட்டு படம் எடுத்துவிட்டு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்று புலம்ப வேண்டாம் என ஆமீர் கான் ஒரு முறை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லினியர் படத்துக்காக ஒன்றல்ல இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கினார். அவருடன் சேர்ந்து அதே படத்திற்காக சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் விருது பெற்றார். அதன் பிறகும் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோதிலும் அவருக்கு மீண்டும் ஆஸ்கர் கிடைக்கவில்லை.

மீண்டும் ஆஸ்கர் ரேஸில் ரஹ்மான்
ஏற்கனவே ஆஸ்கர் விருது வாங்கிய ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பீப்பிள் லைக் அஸ் என்ற ஹாலிவுட் படத்திற்கு சிறப்பாக இசையமைத்ததற்காக ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கேரளத்து இசையமைப்பாளர் ஸ்ரீவல்சன் ஜே. மேனன்
செயிண்ட் டிராகுலா என்ற ஆங்கில படத்திற்கு இசையமைத்துள்ள மாலிவுட் இசையமைப்பாளர் ஸ்ரீவல்சன் ஜே. மேனனின் பெயரும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஷெரின் கேத்ரீனின் பாடல்கள்
செயிண்ட் டிராகுலா படத்திற்காக 24 வயதே ஆன கேரளாவைச் சேர்ந்த ஷெரின் கேத்ரீன் ஐ பீ ஹியர் மற்றும் ஐ ஹேவ் சீக்ரட்ஸ் ஆகிய 2 பாடல்களை எழுதினார். இந்நிலையில் ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல்கள் பிரிவில் அந்த 2 பாடல்களுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அமலா பால் படம்
பிஜு குமார் எழுதி இயக்கி பிரித்விராஜ், அமலா பால் நடித்த மலையாளப் படமான ஆகாஷதின்டே நேரம் சிறந்த படங்கள் பிரிவில் ஆஸ்கருக்கு சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications











