twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுவரை ஆஸ்கர் அவார்டு வாங்கிய இந்தியர்கள்...ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே சிறப்பு ஏன்?

    |

    ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்ட ஜெய்பீம், மரக்காயர், ரைட்டிங் வித் ஃபயர், கூழாங்கல் போன்ற படங்களில் ரைட்டிங் வித் ஃபயர் மட்டுமே நாமினேட் ஆகியுள்ளது. ஆஸ்கர் விருது எட்டாக்கனியா? அல்ல என பல இந்தியர்கள் நிரூபித்துள்ளனர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே சிறப்பானவர் காரணம் என்ன?

    இளையராஜாவின் இசை மழையில் நனைய தயாராகுங்கள்...அதுவும் லைவில்...எப்போ தெரியுமா? இளையராஜாவின் இசை மழையில் நனைய தயாராகுங்கள்...அதுவும் லைவில்...எப்போ தெரியுமா?

    ஆஸ்கர் விருதுக்குச் சென்ற ஜெய்பீம்

    ஆஸ்கர் விருதுக்குச் சென்ற ஜெய்பீம்

    இந்திய சினிமாவில் அதிக அளவுக்கு பங்களிப்பை செலுத்திய படங்களில் தமிழ் படங்களுக்கு, தமிழர்களுக்கு சிறப்பான இடம் உண்டு. முதல் ஆஸ்கர் விருதுக்காக சென்ற படத்தில் முதன் முதலில் சென்ற தமிழ் படம் என்ற பெருமையை 1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனின் 'தெய்வமகன்' படம் பெற்றது. அதன் பின்னர் பல படங்கள் சென்றது. கடைசியாக சென்ற படம் 'ஜெய்பீம்'.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்பீம் ஆனால் ஏமாற்றம்

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்பீம் ஆனால் ஏமாற்றம்

    'ஜெய்பீம்' திரைப்படம் வெளியானவுடன் பலத்த எதிர்ப்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றது. இந்தப்படம் தமிழகம் முழுவதும் அரசியல் விவாதமாகவும் மாறியது. இந்தப்படம் சாதாரண விளிம்பு நிலையில் உள்ள இருளர் இன மக்களுக்கு நடந்த நிஜக்கொடுமையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதாலும், அப்போது வழக்கில் வாதாடி நீதியை பெற்றுத்தந்த ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துருவும் நிஜ சாட்சியாக இருப்பதால் படம் பெரும் வரவேற்பை பெற்றது.

    ஆஸ்காருக்கு சென்ற படம்

    ஆஸ்காருக்கு சென்ற படம்

    ஆஸ்கருக்கு ஜெய்பீம் உள்ளிட்ட இந்தியப்படங்கள் சென்றாலும் ஆஸ்கர் நாமினேஷனில் அப்படம் தேர்வாகும் என ஜூரிகளில் ஒருவரும், ஹோஸ்டுமான ஜாக்குலின் கோலே நேற்றுக்காலையிலும் ஜெய்பீம் சிறந்த படம் என பதிவிட்டு ஆர்வத்தை அதிகப்படுத்தினார். ஆனால் மாலையில் நடந்த நாமினேஷன் லிஸ்ட் வெளியீட்டில் ஜெய்பீம் இடம்பெறவில்லை.

    ஆஸ்கர் விருது கிடைக்காத ஒன்றாத சாதித்த இந்தியர்கள்

    ஆஸ்கர் விருது கிடைக்காத ஒன்றாத சாதித்த இந்தியர்கள்

    ஆஸ்கர் விருது கிடைக்காத ஒன்றா? இல்லை என்பதை பல இந்தியர்கள் நிரூபித்துள்ளனர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே சிறப்புக்குரியவர். பல இந்தியர்கள் ஆஸ்கர் விருதுகள் பெற்றுள்ளனர். இதில் வெளிநாடுவாழ் இந்தியர்களும் அதிகம் உள்ளனர். இந்தியர்கள் பெற்ற விருதுகளில் முதன்மையானவர் சத்யஜித்ரே. இவருக்கு வாழ்நாள் சாதனையாளராக விருது அளிக்கப்பட்டது.

    ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே ஏன் சிறப்பானவர்

    ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே ஏன் சிறப்பானவர்

    ஆஸ்கர் விருது பெற்றவர்களில் இந்தியர்கள் பலர் உண்டு. அதில் சிலர் மட்டுமே சிறப்பானவர்கள். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே சிறப்பானவர். ஏனென்றால் அவர் மட்டுமே இரண்டு விருதுகளை பெற்றுள்ளார். ''ஸ்லம் டாக் மில்லியனர்' படத்துக்காக 2009 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசை ஆஸ்கர் விருது பெற்றார். அதனுடன் அதே படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஜார் இருவரும் சிறந்த பாடலுக்காக விருதை பகிர்ந்துக்கொண்டனர்.

    எல்லா புகழும் இறைவனுக்கே

    எல்லா புகழும் இறைவனுக்கே

    'ஜெய்ஹோ' என்கிற பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடலுக்காக அவ்விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப்பெற்றபோது ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன 'எல்லா புகழும் இறைவனுக்கே' வசனம் மிகவும் பாராட்டப்பட்டது. விருதுப்பெற்றவர்களில் முதன் முதலில் விருது பெற்றவர்

    முதல் ஆஸ்கர் விருது பெற்ற இந்தியர்கள்

    முதல் ஆஸ்கர் விருது பெற்ற இந்தியர்கள்

    ஆஸ்கர் விருதைப்பெற்ற முதல் இந்தியர், முதல் பெண்மணி என்கிற இரண்டு பெருமையையும் காந்தி படத்துக்காக பானு அத்தையா பெற்றார். 'காந்தி' படத்துக்காக 1983 ஆம் ஆடு பானு அத்தையா(காஸ்டியூம்), வென்றார், முதல் ஆஸ்கர் விருது பெற்ற பெண் என்றும், ஆஸ்கர் நாயகி எனவும் அழைக்கப்பட்டார்.

    காந்தி' படத்துக்காக 1983 ஆம் ஆண்டு ரவிஷங்கர் (பெஸ்ட் ஒரிஜினர் ஸ்கோர் -மியூசிக்) வென்றார், முதல் ஆஸ்கர் விருது பெற்ற இந்தியர் என்கிற பெருமையை பானு அத்தையாவுடன் பகிர்ந்துக்கொண்டார். அதே 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக 2009 ரசூல் பூக்குட்டி பெஸ்ட் சவுண்ட் மிக்சிங் ஆஸ்கர் விருது வென்றார்.

    அடுத்தடுத்த விருது பெற்ற இந்தியர்கள்

    அடுத்தடுத்த விருது பெற்ற இந்தியர்கள்

    அதற்கு அடுத்து வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதை பிரபல வங்க மொழி இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு 1992 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

    அனிமேஷன் படத்திற்காக 2016 ஆம் ஆண்டு ராகுல் தக்கார், தொழில் நுட்பம் ஆஸ்கர் விருதை பகிர்ந்துக்கொண்டார்.
    'ஏமி' படத்திற்காக 2016 ஆம் ஆண்டு ஆசிப் கபாடியா (பெஸ்ட் டாக்குமெண்ட்ரி) ஆஸ்கர் விருதை வென்றார்.
    கேமரா சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக 2018 ஆம் ஆண்டு ரிகாஷ் சத்யே (தொழில் நுட்பம்) ஆஸ்கர் விருதை பகிர்ந்துக் கொண்டார்.

    Read more about: indian oscar jai bhim
    English summary
    Indians who have won the Oscar so far ... Do you know why only AR Rahman is special?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X