கோல்டன் குளோப் விழா… பட்டியலில் இடம் பிடித்த ஜெய்பீம்… ரசிகர்கள் ஹேப்பி !

சென்னை : கோல்டன் குளோப் 2022ம் ஆண்டுக்கான வெளிநாட்டு படப்பிரிவின் பட்டியலில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் இடம் பிடித்துள்ளது.

ரசிகர்கள் பலரும் நடிகர் சூர்யாவுக்கு இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2022 கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா ஜனவரி 9 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.

கோல்டக் குளோப்

கோல்டக் குளோப்

ஹாலிவுட் ஃபாரின் ப்ரெஸ் அசோசியேஷன் என்கிற அமைப்பு சினிமா மற்றும் சின்னத்திரையில் சிறந்த படைப்புகளையும், கலைஞர்களையும் வருடா வருடம் கௌரவித்து வருகிறது. இதுவே கோல்டன் குளோப் என்றழைக்கப்படுகிறது.

ஜெய்பீம்

ஜெய்பீம்

ஆஸ்கார் விருதுக்கு அடுத்ததாக உலக திரைக்கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படும் விருதாக கோல்டன் குளோப் விருதுகள் பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், கோல்டன் குளோப்ஸ் 2022ம் ஆண்டுக்கான வெளிநாட்டு படப்பிரிவின் பட்டியலில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் இடம் பிடித்துள்ளது.

உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் என பலரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் 'ஜெய்பீம்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் நடிகர் மணிகண்டன் ஏற்று நடித்த 'ராஜாகண்ணு' கதாபாத்திரமும் அவருடைய இயல்பான நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.

கண்கள் குளமாகின

கண்கள் குளமாகின

ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களின் உணர்வுகளை ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தி, அனைவர் கண்களையும் குளமாக்கியது ஜெய்பீம். தமிழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

Recommended Video

Jai Bhim Controversy! வருத்தம் தெரிவித்த Director Gnanavel | OneIndia Tamil
ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

சமூகத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் ஜாதி என்பது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சிலருக்கு சலுகைகளையும் ஒரு சிலருக்கு தீராத வலிகளையும் எப்படி ஏற்படுத்துகிறது என்பதை தோலுரித்துக் காட்டியுள்ள திரைப்படம் தான் ஜெய்பீம். இத்திரைப்படம், கோல்டன் குளோப்ஸ் 2022ம் ஆண்டுக்கான வெளிநாட்டு படப்பிரிவின் பட்டியலில் இடம் பிடித்துள்ளதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X