தமிழர்களின் பெருமைக்குரிய தருணம்... ஆஸ்கரில் இடம்பெற்ற ஜெய்பீம் திரைப்படக் காட்சிகள்
சென்னை : சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள படம் ஜெய்பீம்.
இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகளையும் குவித்து வருகிறது.
இந்நிலையில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், படத்தின் காட்சிகள் தற்போது ஆஸ்கரில் இடம்பெற்றுள்ளது.

ஜெய்பீம் படம்
நடிகர் சூர்யா லீட் கதாபாத்திரத்தில் நடித்து தீபாவளியையொட்டி அமேசான் பிரைமில் வெளியான படம் ஜெய்பீம். பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் சூர்யா. முதல்முறையாக அவர் வழக்கறிஞர் கதாபாத்திரம் ஏற்றதும் இந்தப் படத்தில்தான்.

ஓடிடியில் நேரடி ஒளிபரப்பு
இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பான நிலையிலும், ரசிகர்களின் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. டிஜே ஞானவேல் இயக்கியிருந்த இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் லிஜோ மோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன்.

சர்வதேச பாராட்டுக்கள்
சர்வதேச அளவிலும் பல பாராட்டுக்களை பெற்றுவரும் ஜெய்பீம், கடந்த ஆண்டில் இந்திய அளவில் தேடப்பட்ட படங்களில் முதலிடத்தையும் பிடித்தது. மேலும் ஐஎம்டிபி இணையதளத்திலும் 9.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருந்தது.

ஆஸ்கரில் இடம்பெற்ற ஜெய்பீம்
இந்நிலையில் ஆஸ்கரிலும் இந்தப் படம் தற்போது இடம்பெற்றுள்ளது. ஆஸ்கரின் யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் படத்தின் காட்சிகள் தற்போது சீன் அட் தி அகாடமி என்ற பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் படத்தின் இயக்குநர் படம் குறித்து பேசுவதும் அதில் காணப்படுகிறது.
Recommended Video

தமிழ் சினிமாவின் கௌரவம்
தமிழ் சினிமாவிற்கு இது மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. தமிழ் சினிமா ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அந்தப் படத்திற்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிறப்பான ஆஸ்கர் விருது
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது ஆஸ்கர். இந்த விருதை வெல்வது சிறப்பாக கருதப்படும் நிலையில் உலக நாடுகளில் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு ஆஸ்கர் வழங்கப்படுகிறது. இதற்கென பல படங்கள் போட்டியிட்டு சில படங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், ஆஸ்கரின் யூடியூப் சேனலில் ஜெய்பீம் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











