Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
உலகெங்கும் ஒலிக்கிறது சூர்யாவின் ஜெய்பீம்.. மெல்போர்ன், சீனா என தொடரும் சர்வதேச அங்கீகாரம்!
சென்னை: இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.
ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் யூடியூப் சேனலில் இடம்பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், தற்போது மெல்போர்ன், சீனா என அடுத்தடுத்து சர்வதேச அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன.
ஜெய்
பீம்
வழக்கு..
சூர்யா
மீது
கடும்
நடிவடிக்கை
வேண்டாம்..சென்னை
உயர்நீதிமன்றம்
உத்தரவு!

விருது நாயகன் சூர்யா
சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருது வென்றார் நடிகர் சூர்யா. ஒட்டுமொத்தமாக அந்த படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்தன. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜெய்பீம் திரைப்படத்துக்காகவும் பல தேசிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்துக்கு அங்கீகாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

ஆஸ்கர் வரை அங்கீகாரம்
கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகள் என சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படங்கள் போட்டிக்கு அனுப்பப்பட்டன. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்கு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பரிந்துரைப் பட்டியலில் கூட அந்த படம் வர தவறியது. ஆனாலும், ஆஸ்கர் யூடியூப் சேனலில் ஜெய்பீம் காட்சிகளை வெளியிட்டு இருந்தனர். மேலும், ஆஸ்கர் குழுவில் இருக்கும் சிலர் ஜெய்பீம் படம் ஆஸ்கர் வெல்லத் தகுதியான படம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர்

மெல்போர்னில் திரையிடல்
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சிவாஜியின் பராசக்தி படமும் டாப்ஸியின் விரைவில் வெளிவர உள்ள டோபாரா திரைப்படமும் திரையிடப்படுகிறது. இந்த விழா ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

சீனாவில் விருது
12வது சர்வதேச பெய்ஜிங் திரைப்பட விழாவில் வழங்கப்படும் டியாண்டன் விருதுக்கு சூர்யாவின் ஜெய்பீம் விருது தேர்வு செய்யப்பட்டுள்ள அறிவிப்பும் தற்போது வெளியாகி சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது அதிகளவில் சர்வதேச அங்கீகாரத்தை அள்ளி வரும் நடிகராக சூர்யா திகழ்வது குறிப்பிடத்தக்கது.