சிவப்புக் கம்பளத்தில் நடந்த நடிகை: கடவுளே கடவுளேன்னு டென்ஷனான ரசிகர்கள் #Oscars
Recommended Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிவப்புக் கம்பளத்தில் நடந்த ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸை பார்த்து ரசிகர்களுக்கு பதட்டமாகிவிட்டது.
90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் அதிகபட்சமாக நான்கு விருதுகளை பெற்றது.
சிறந்த படத்திற்கான விருது தி ஷேப் ஆஃப் வாட்டருக்கு கிடைத்தது.

சிவப்புக் கம்பளம்
ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் இந்த ஆண்டு நடந்த விழாவில் சிவப்புக் கம்பளத்தில் நடந்தார். அவர் நடந்து முடிப்பதற்குள் ரசிகர்களுக்கு பதட்டமாகிவிட்டது.

ஆஸ்கர் விழா
ஜெனிபர் லாரன்ஸ் 2012ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற மேடைக்கு சென்றபோது கவுன் தடுக்கி கீழே விழுந்தார்.

விழுந்தார்
2014ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விழாவில் நுழைவாயிலிலேயே கால் தடுக்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து ஜெனிபரை தூக்கிவிட்டனர். அதனால் தான் இந்த ஆண்டு அவர் சிவப்புக் கம்பளத்தில் நடந்த போது மீண்டும் கீழே விழுந்துவிடுவாரோ என்று ரசிகர்கள் அஞ்சினர்.

விழாக்கள்
ஆஸ்கர் விழாக்களில் மட்டும் அல்ல அவர் நடித்த படங்களின் ப்ரீமியர் ஷோக்களின்போது சிவப்புக் கம்பளத்தில் நடந்த போதும் கீழே விழுந்துள்ளார் ஜெனிபர் லாரன்ஸ்.

நாற்காலி
இந்த ஆண்டு விழாவின்போது சீனியர் நடிகையான மெரில் ஸ்ட்ரீப்பை பார்த்த ஜெனிபர் ஒரு கையில் ஒயினை வைத்துக் கொண்டு சேர் மீது ஏறி தாவி வந்து அவரிடம் ஹலோ சொன்னார். அவர் தாவும்போது கீழே விழுந்துவிடுவாரோ என்று அங்கிருந்தவர்கள் பதறிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











