twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜோஷ் ஆப் நடத்திய JFLIX குறும்பட போட்டி.. 47,000 வீடியோக்கள்.. பரிசுகளை அள்ளிய போட்டியாளர்கள்!

    |

    சென்னை: Josh செயலி சமீபத்தில் ஷார்ட் வீடியோவிற்கு என்று குறும்பட போட்டி ஒன்றை JFLIX என்ற பெயரில் கோவாவில் நடத்தியது. பல்வேறு ஷார்ட் வீடியோ கிரியேட்டர்கள் இடையே இந்த விழா பெரிய வரவேற்பை பெற்றது.

    ஷார்ட் வீடியோ பதிவேற்று தளமான Josh செயலி இந்தியாவின் நம்பர் 1 வீடியோ தளமாக உருவெடுத்து உள்ளது. ஷார்ட் வீடியோ தளத்தை புதிய உயரத்திற்கு எடுத்து சென்ற பெருமை Josh செயலியையே சேரும். விதவிதமான வீடியோக்கள், கன்டென்ட் ஐடியாக்கள், போட்டிகள், நிகழ்ச்சிகள் மூலம் Josh செயலி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

    இந்த நிலையில்தான் Joshசெயலி சமீபத்தில் ஷார்ட் வீடியோவிற்கு என்று குறும்பட போட்டி ஒன்றை JFLIX என்ற பெயரில் கோவாவில் நடத்தியது. Josh நடத்திய JFLIX எனும் குறும்பட விழாவில் பல மொழிகளில் இருந்து திறமையான போட்டியாளர்கள் பலர் பங்கு பெற்றனர்.

    JFLIX Film Festival Goa: Josh festival saw 47,000 videos acorss the country

    நாடு முழுவதும் உள்ள கிரியேட்டர்களின் பாரம்பரிய சினிமா ரசனைக்கு சவால் விடும் வகையில் JFLIX போட்டி அமைந்து இருந்தது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒரு நிமிட வீடியோக்கள் பார்வையாளர்களுக்கு திரைப்படம் பார்ப்பது போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியது. பல வீடியோக்கள் சினிமாவிற்கு இணையான தொழில்நுட்பத்தோடு சிறப்பாக இருந்தன.

    மொத்தமாக 47,000 வீடியோக்கள் JFLIXல் பதிவிடப்பட்டன. இந்த போட்டி இன்றைய ஷார்ட் வீடியோ தளத்தினை கதை சொல்லும் வகையில் வேறொரு புதிய தளத்திற்கு எடுத்து சென்றது. ஷார்ட் வீடியோ கிரியேட்டர்களுக்கு சினிமா எடுக்கும் உத்வேகத்தை கொடுத்தது.

    நட்சத்திர நடுவர்கள் பாராக் கான், குணால் கோலி மற்றும் பிரபுதேவா ஆகியோர் இதில் நடுவர்களாக கலந்து கொண்டனர். விவேக் ஓபராய், சுனில் ஷெட்டி போன்ற பிரபலங்களும் இதில் கலந்து கொண்டனர். வருங்கால குறும்பட இயக்குநர்களான தேர்ந்தெடுக்கப்பட்ட கிரியேட்டர்களுக்கு நடுவர்கள் சிறப்பு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்கள்.

    JFLIX Film Festival Goa: Josh festival saw 47,000 videos acorss the country

    இந்த போட்டியில் தமிழ் மொழியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட டிராவிட் கண்ணன் மற்றும் பிரசாந்த் ஜோ இருவரும் சிறப்பு விருதுகளை பெற்றனர். பிரபுதேவா முன்னிலையில் best regional film என்ற விருதை டிராவிட் கண்ணனும், critics விருதை பிரசாந்த் ஜோவும் பெற்றனர். விருதைப் பெற்ற பிறகு டிராவிட் கண்ணன் தமிழில் தன் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் நன்றி தெரிவித்து அரங்கத்தையே அதிர வைத்தார்.

    பரிசு பெற்ற டிராவிட் கண்ணன் பேசியதாவது, முதலில் இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த Josh மற்றும் JFLIXக்கு பெரிய நன்றி. இப்போ எதாச்சும் நினைச்சு பாத்த கூட எல்லாம் கனவு மாறி இருக்கு. அப்புறம் இதுக்கு முக்கிய காரணம் Josh தமிழ் கம்யூனிட்டி டீம் தான். அவங்க மட்டும் இல்லனா எனக்கு இந்த அவார்ட் கிடைச்சுருக்குமானு சந்தேகம் தான்.

    அவங்க என்கிட்ட அந்த போட்டி பத்தி சொல்லும்போதே.. நீ கண்டிப்பா ஜெயிப்பனு சொன்னாங்க . அந்த வார்த்தை வீண் போகலை. தமிழ் டீமிற்கு பெரிய நன்றி. அப்புறம் என்னோட பெரிய ஆதரவாளர்கள் எங்க அம்மா அப்பா தான். அவங்க எனக்கு சப்போர்ட் பண்ணலைனா இங்க வரைக்கும் வந்திருப்பானான்னு நினைச்சு கூட பாக்க முடியல லவ் யூ அப்பா அம்மா. இந்த அவார்ட் எனக்கு கிடைக்கும்னு நினைச்சு கூட பார்க்கலை. சரி நாமினிஸ்ல வந்திருக்கோம் சும்மா போய் என்ஜாய் பண்ணிட்டு வரலாம்னு தான் பாத்தேன். ஆனா கொஞ்சம் கூட எதிர்பார்கலை. Joshக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இது எனக்கு கிடைத்த முதல் விருது, நான் எவ்வளவு உயரத்துக்கு போனாலும் இதை மறக்கமாட்டேன். எனக்கு கொஞ்சம் ஸ்டேஜ் பயம் அதான் நிறைய பேருக்கு என்னால நன்றி சொல்ல முடியல இப்போ சொல்றேன் எனக்கு உதவி பண்ணி ஊக்கப்படுத்தும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றிi

    அது மட்டுமில்லாம எனக்கு இது முதல் விமான அனுபவம், எல்லாம் Josh ஆப்பால்தான். நன்றி Josh, என்று குறிப்பிட்டார்.

    JFLIX Film Festival Goa: Josh festival saw 47,000 videos acorss the country

    பரிசு பெற்ற பிரசாந்த் பேசியதாவது, வணக்கம், நான் பிரசாந்த், நான் 1 வருடமாக Josh வீடியோ ஆப் பயன்படுத்திகிட்டு இருக்கேன். தினமும் குறைந்தபட்சம் 2 பதிவாவது போஸ்ட் பண்றேன். Josh ஆப் மூலமா இப்போ வர எனக்கு நிறைய பாராட்டு கிடைத்து உள்ளது. இப்போ எனக்கு 1.6 மில்லியன் பாலோவர்ஸ் இருக்காங்க. இதை நான் கண்டிப்பா எதிர்பார்க்கவே இல்ல, திறைமைகளை ஊக்குவிக்க Josh ஆப் எப்போதும் தவறுனதே இல்ல., இங்க நானும் கிரியேட்டரா இருக்குறதுல ரொம்ப பெருமை படுறேன். இந்த நாளை நான் கண்டிப்பா மறக்கமாட்டேன். ஒரு பெரிய மேடைல ஜாம்பாவன் நடிகர்கள்/கலைஞர்கள் முன்னாடி எனக்கு சிறந்த பாராட்டு கிடைச்சது. மனஅழுத்தம் அப்படிங்கிறதை மெயின் தீமா வைச்சு 1 நிமிஷம் வீடியோ அப்லோட் பண்ணேன். அந்த வீடியோ செலக்ட் ஆகி என்ன இந்த விருது விழாவுக்காக கோவா வரை கூட்டிப்போகும்னு நினைக்கவே யில்லை. நான் 3 பிரிவுகள்ல நாமினேட் ஆகி (சிறந்த நடிகர், சிறந்த பிராந்திய படம், விமர்சகர்கள் தேர்வு) விமர்சகர்கள் தேர்வு பிரிவில்ல அவார்ட் வாங்குனேன். எனக்கு ரொம்ப சந்தோஷம். ஜோஷ் குழுவுக்கும், ஜோஷ் தமிழ் மக்களுக்கும் ரொம்ப நன்றி.

    நான் கிரியேட்டர்களுக்கும் மக்களுக்கு ஒன்னு சொல்ல விரும்புறேன். நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன், நான் ஐடியில் வேலை செய்கிறேன். மத்த நேரத்துல தொடர்ச்சியாக வீடியோ அப்லோட் பண்ணுவேன். நான் 3 வருசம் இதுக்காக எடுத்துகிட்டேன். நீங்களும் உங்களுக்கு பிடித்ததை தொடர்ச்சியாகவும், கடின உழைப்போடும் பண்ணுங்க. கொஞ்சம் பொறுமையாவும் இருங்க! கண்டிப்பா கடின உழைப்பு உங்களுக்கு பலன் கிடைக்கும், என்று குறிப்பிட்டு பாராட்டி உள்ளனர்.

    இந்த போட்டியில் கலந்து கொண்டு வென்ற பலர், போட்டியாளர்கள் பலர் Josh செயலிக்கு இந்த போட்டியை நடத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்.

    Read more about: josh app ஜோஷ் ஆப்
    English summary
    JFLIX Film Festival Goa: Josh festival saw 47,000 videos acorss the country. Talented video makes got exclusive awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X