ஸ்கார்லட்டுக்கு கிடைக்கலையே... சிறந்த நடிகை விருதை தட்டிச் சென்ற 'ஜூடி' பட நடிகை
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது ஸ்கார்ட்லெட்டுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூடி படத்தில் நடித்த ரினீ ஸெல்வேகருக்கு கிடைத்துள்ளது.
92 வது ஆஸ்கர் விருது விழா இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் சினிமாவின் உயரிய விருது விழாவான இதில், கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

விழா நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கம் திரை நட்சத்திரங்களால் நிரம்பி வழிகிறது. இந்த விழா கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறுகிறது.
சிறந்த நடிகருக்கான விருது, ஜோக்கர் படத்தில் சிறப்பாக நடித்திருந்த ஜோக்கின் பீனிக்ஸுக்கு கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருது மேரேஜ் ஸ்டோரி படத்தில் நடித்ததற்காக, ஸ்கார்லட் ஜோனாசனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஜூடி படத்தில் நடித்த ரினீ ஸெல்வேகருக்கு கிடைத்துள்ளது.
நாமினேஷன் லிஸ்ட்:
Cynthia Erivo - Harriet
Scarlett Johansson - Marriage Story
Saoirse Ronan - Little Women
Charlize Theron - Bombshell
Renee Zellweger - Judy


Click it and Unblock the Notifications











